News
எங்கம்மாவ கூட்டிட்டு வர்ரேன் ஏன் விஜய்யை விட சூர்யா பெரிய ஹீரோன்னு கேளுங்க!.. பத்திரிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்!.
குறைந்த பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் பட்ஜெட்டை பொருத்து எந்த ஒரு படத்தையும் மக்கள் முடிவு செய்வதில்லை பெரும் நடிகர்களுக்கு ஒரு ரசிக கூட்டம் இருந்தாலுமே கூட சின்ன திரைப்படங்களையும் மக்கள் பார்க்கதான் செய்கிறார்கள்.
அந்த திரைப்படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அது பிரபலமாவதையும் பார்க்க முடிகிறது. இந்த வருடத்தில் குட் நைட், பார்க்கிங் மாதிரியான சில திரைப்படங்கள் குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கூட மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்ட பேசப்பட்டதோடு இல்லாமல் திரையிலும் நல்ல வெற்றியை கொடுத்தன.
இந்த வகையில் தற்சமயம் இயக்குனர் எஸ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி என்கிற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கான பேட்டி தற்சமயம் நடந்த பொழுது அதில் பேசிய இயக்குனர் பல விஷயங்களை பேசி இருந்தார்.

அப்பொழுது தான் சிவகுமார் பிறந்த ஊரிலிருந்து வருவதாகவும் எனவே ஊரில் இருந்து திரைத்துறைக்கு வரும் பொழுது சிவக்குமார் நம் ஊரின் பெயரை காப்பாற்றியுள்ளார். நீயும் அதை செய்ய வேண்டும் பெயரை கெடுத்து விடாதே என சொல்லி அனுப்பினார்கள்.
மேலும் உவமைக்கு கூட எங்கள் ஊரில் பேசும் பொழுது நீ என்ன பெரிய சிவகுமாரின் மகனா என்றுதான் கேட்பார்கள். அந்த அளவிற்கு சிவக்குமார் குடும்பம் மீது எங்கள் ஊரில் ஈடுபாடு உண்டு என்று இயக்குனர் கூறிக் கொண்டிருக்கும் பொழுது ஏன் விஜயையும் பெரிய நடிகர் தானே விஜய் பற்றி பேச மாட்டார்களா என்று சர்ச்சையை கிளப்ப பார்த்தார் அங்கிருந்த பத்திரிகையாளர்.
இதனை அறிந்து கொண்ட இயக்குனர் நான் வேண்டுமானால் என் அம்மாவை அழைத்து வருகிறேன். அவரிடம் எதற்காக நீங்கள் விஜயை கூறாமல் சூர்யாவை கூறினீர்கள் என்று கேட்கிறீர்களா என்று பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குனர். இதனை அறிமுக இயக்குனராக இருந்தாலும் பத்திரிகைகள் காரர்களை அவர் கையாளும் விதத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
