இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா. கர்நாடகாவில் பழங்குடி மக்களின் குல தெய்வமான பஞ்சுருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாக வைத்து இதன் கதை செல்லும்.
அதன் வெற்றியை தொடர்ந்து தொடர்ச்சியாக ரிஷப் ஷெட்டி அடுத்து இயக்கிய திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1. இந்த திரைப்படத்தில் சிவ பெருமானை முக்கிய கடவுளாக வைத்து கதைக்களம் அமைந்திருந்தது.
வசூல் நிலவரம்:

இரண்டு திரைப்படங்களிலுமே கதை அம்சம் என்பது ஒரே மாதிரிதான் அமைந்திருந்தது. அதாவது அந்த பழங்குடி மக்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும்போது அவர்களது தெய்வம் அதை தடுக்க அங்குள்ள மக்கள் உடலிலேயே தோன்றி பாதுகாக்கும்.
அதை வட்டார தெய்வங்கள் வழக்கில் தத்ரூபமாக எடுப்பதே ரிஷப் ஷெட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. முதல் பாகம் 600 கோடி வெற்றியை கொடுத்த நிலையில் தற்சமயம் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 700 கோடியை தாண்டி சென்றுள்ளது.
எப்படியும் இந்த படம் ஆயிரம் கோடி வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.