ராமநாராயணன் மாதிரியான இயக்குனர்கள் இருந்த காலகட்டங்களில் சாமி படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் யாரும் அவ்வளவாக அந்த மாதிரி அம்மன் படங்களையோ முருகன் படங்களையோ பார்ப்பது கிடையாது.
ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி நமது வட்டார தெய்வங்களை அடிப்படையாக வைத்து அதை திரைப்படம் ஆக்கி பெரும் வசூலை குவித்திருக்கிறார் இயக்குனர் ரிஷப் செட்டி.
கர்நாடகாவில் உள்ள வட்டார தெய்வமான பஞ்சுருளி என்கிற தெய்வத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு அவர் எடுத்த காந்தாரா திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது வெளியான திரைப்படம் தான் காந்தாரா சாப்டர் 1.
இதில் சிவபெருமானை முக்கிய கடவுளாக வைத்து பஞ்சுருளி மாதிரியான வட்டார தெய்வங்கள் எல்லாம் சிவபெருமானின் சிவ கணங்கள் என்பதாக கூறி கதைகளை கொண்டு சென்று இருக்கிறார் ரிஷப் செட்டி.
ஆனாலும் உணர்வுபூர்வமாக படத்தின் கதைகளும் பலருக்கும் கனெக்ட் ஆன காரணத்தினால் இந்த படம் இப்பொழுது பெரும் வெற்றி படமாக மாறி இருக்கிறது. வெளியாகி 13 நாட்கள் ஆன நிலையில் இதுவரை காந்தரா சாப்டர் 1 திரைப்படம் 650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது இன்னும் இதன் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.