Tamil Cinema News
சிவகார்த்திகேயனை விட அதிக பட்ஜெட்.. செலக்ஷனில் மாஸ் காட்டும் கார்த்தி.. அடுத்து இணையும் இயக்குனர்..!
தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக நடிகர் கார்த்தி இருந்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வரவேற்பைதான் பெற்று தந்தன.
அதனை தொடர்ந்து அவர் நடித்து வரும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் கார்த்தி. அதே மாதிரி ஒரே மாதிரியான கதாபாத்திரமாக நடிக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார் கார்த்தி.
அப்படியாக அடுத்தடுத்து கார்த்தி நடிக்கும் திரைப்படங்களும் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கின்றன. அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்கிற திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அந்நியன் திரைப்படத்தில் வருவது போல இவருக்குள் இரண்டு கதாபாத்திரம் இருப்பதாக இந்த கதை இருக்கிறது.
கார்த்தியின் அடுத்த படம்:
அதனை தொடர்ந்து சர்தார் 2 திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். சர்தார் 2 திரைப்படத்திற்கு பிறகு டானாக்காரன் திரைப்படத்தின் இயக்குனரான தமிழ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
டானாக்காரன் திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த திரைப்படமும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய காலங்களில் நடக்கும் கதை என்பதால் அந்த படத்தின் பட்ஜெட் அதிகம் என கூறப்படுகிறது.
தற்சமயம் சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தின் பட்ஜெட் 250 கோடி ஆகும். இதை விட அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தின் பட்ஜெட் அதிகம் என பேச்சுக்கள் இருக்கின்றன.