ஒரு எழுத்தாளன் முன்னேறுனா இவங்களுக்கு பொறுக்காது!.. பவா ஹேட்டர்ஸை வச்சி செய்த கரு பழனியப்பன்!.
தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஒவ்வொரு வருடமும் திரைத்துறையில், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள நபர்களை பிக்பாஸ் வீட்டிற்கு தேர்ந்தெடுப்பது வழக்கமாகும்.
ஆனால் இந்த முறை அதிலிருந்து சற்று மாறுபட்டு எழுத்தாளர் பவா செல்லதுரையை பிக்பாஸில் தேர்ந்தெடுத்திருந்தனர். தமிழில் உள்ள பிரபலமான எழுத்தாளர்களில் பவா செல்லதுரை முக்கியமானவர் ஆவார். ஆனால் பவா செல்லதுரை பிக்பாஸிற்கு சென்றிருக்க கூடாது என பலரும் அவரை விமர்சித்து வந்தனர்,
இந்த நிலையில் முதல் வாரத்திலேயே அவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுக்குறித்து தமிழா தமிழா புகழ் கரு பழனியப்பன் கூறும்போது, நம் மக்களை பொறுத்தவரை நல்லவன் என்பவன் கையில் மஞ்சள் பை வைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் நிற்க வேண்டும். அவன் காரெல்லாம் வைத்திருக்க கூடாது.
ஒரு நர்ஸ் என்றால் தியாகம் செய்பவராக இருக்க வேண்டும். அவர் காரெல்லாம் வைத்திருக்க கூடாது. இவங்க அவர் எழுதுற புத்தகத்தையும் காசு கொடுத்து வாங்க மாட்டாங்க. ஆயிரம் புத்தகத்தை விக்கிறதுக்குள்ள அவங்களுக்கு நாக்கு தள்ளிடும்.
சரி பிக் பாஸ்ல காசு கிடைக்குது. அவரும் சம்பாதிச்சுட்டு போகட்டுமே. எவன் எவனோ தப்பு செஞ்சு சம்பாதிக்கிறான். அதெல்லாம் இந்த மக்களுக்கு உறுத்தவில்லை. ஆனால் பவா சம்பாதிச்சா மட்டும் உறுத்துகிறதா என கேட்டிருந்தார் கரு பழனியப்பன்.