Connect with us

ஐயா சாமி தர்மம் பண்ணுங்கையா… கவின் படக்குழுவை கதறவிட்ட அனிரூத்.. இதுதான் காரணம்!..

kavin anirudh

Tamil Cinema News

ஐயா சாமி தர்மம் பண்ணுங்கையா… கவின் படக்குழுவை கதறவிட்ட அனிரூத்.. இதுதான் காரணம்!..

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகராகவும் நடிகர் கவின் இருந்து வருகிறார். ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு ஒரு நடிகருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பது பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நடிகராக கவின் இருக்கிறார். முதன்முதலாக அவர் நடித்த லிப்ட் என்கிற திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

அந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. நேரடியாக ஓடிடியில்தான் வெளியானது. ஆனால் அதனை தொடர்ந்து கவின் நடித்த டாடா திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்தது. குடும்பக் கதையை தேர்ந்தெடுத்த கவின் தொடர்ந்து அதில் வெளிப்படுத்தி இருந்த நடிப்பும் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி இருந்தது.

கவினுக்கு வந்த வாய்ப்பு:

அதனை தொடர்ந்து கவினுக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் வர துவங்கின. அதனால் கவின் அவரது சம்பளத்தை அதிகம் ஆக்கினார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் உள்ளது. கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பதற்கு சுந்தர் சி கவினிடம் கேட்ட பொழுது அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் அந்த திரைப்படத்தில் கவினை சுந்தர் சி நடிக்க வைக்கவில்லை என்று ஒரு பேச்சு உண்டு.

kavin
kavin

அதற்கு தகுந்தார் போல தற்சமயம் கையில் மூன்று நான்கு படங்களை வைத்திருக்கிறார் கவின். ஸ்டார் திரைப்படம் அவருடைய சினிமா வாய்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

நிறைய திரையரங்குகளில் அந்த திரைப்படத்திற்கு கூட்டமே வரவில்லை அதனை தொடர்ந்து இனி கவனமாக அவர் கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. தொடர்ந்து கிஸ் என்கிற ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்கிறார் இந்த திரைப்படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.

தொடர்ந்து படங்கள்:

இது மட்டுமின்றி மாஸ்க் என்கிற ஒரு திரைப்படத்திலும் நடிக்கிறார் மேலும் நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பாக்கர் என்னும் ஒரு திரைப்படத்திலும் கவின் நடித்து வருகிறார். கிஸ் படத்தை பொருத்தவரை அதன் படபிடிப்பு வேலைகள் முழுவதுமே முடிந்து விட்டது.

ஆனால் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அதே சமயத்தில்தான் அனிருத் வேட்டையன் இந்தியன் 2 என்று பெரிய படங்களுக்கெல்லாம் இசையமைத்து வருகிறார். இதனால் கிஸ் திரைப்படத்திற்கு இன்னும் அனிருத் இசை அமைக்கவே ஆரம்பிக்கவில்லை.

ஆனால் பட குழு படபிடிப்பு முடிந்து விட்டதால் பாடல் வேலைகளை மட்டும் முடித்து கொடுத்து விட்டால் பாடல் படப்பிடிப்பையும் முடித்து விடலாம் என்று காத்திருக்கின்றனர் விரைவில் அனிருத் அவர்களுக்கு இசையமைத்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top