Entertainment News
பாவம் அந்த மனுஷன்… தாலியை கட்டிக்கொண்டே கீர்த்தி சுரேஷ் செய்த வேலை.. விளாசும் ரசிகர்கள்..!
கோலிவுட் நடிகைகளில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பெரும்பாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
ஆரம்பத்தில் பைரவா, தொடரி மாதிரியான திரைப்படங்களில் நடித்தப்போது அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார். முக்கியமாக அவருடைய நடிப்பு நன்றாக இல்லை என்பதுதான் அப்போது பேச்சாக இருந்தது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அடுத்து நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் மூலம் பிரபலமடைந்தார் கீர்த்தி சுரேஷ். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்தது.
இந்த நிலையில் அதுவரை பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காத கீர்த்தி சுரேஷ் திடீரென கவர்ச்சி காட்டி நடிக்க துவங்கினார். தெலுங்கில் சர்காரிவாரி பட்டா என்கிற திரைப்படத்தில் ஏற்கனவே கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்
இந்த நிலையில் சமீபத்தில் ஹிந்தியில் பேபி ஜான் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்தார். பேபி ஜான் திரைப்படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இதற்கு நடுவே கீர்த்தி சுரேஷிற்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது. ஆனாலும் பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வரும்போது கவர்ச்சியாகவே வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் பேபி ஜான் படத்தின் கதாநாயகனாக வருண் தவானோடு இணைந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அவைதான் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன.