News
அப்ப துப்பாக்கி படத்தை அப்படி சொன்ன எஸ்.கேதான் இப்ப முருகதாஸ் கூட நடிக்கிறார்.. ஓப்பனாக கூறிய கீர்த்தி சுரேஷ்!..
வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட போக போக கீர்த்தி சுரேஷ் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தத் துவங்கினார்.
தொடர்ந்து பெரும் நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் கீர்த்தி சுரேஷ். நடிகர் விஜய்யுடன் சேர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் தற்சமயம் தெலுங்கு, மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் முதல் ஹிட் படம்:
இத்தனை திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் ஹிட் கொடுத்திருந்தாலும் கீர்த்தி சுரேஷிற்கு வாழ்க்கையை மாற்றிய திரைப்படமாக ரஜினி முருகன் திரைப்படம் அமைந்தது. ரஜினி முருகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த பிறகு கீர்த்தி சுரேஷிற்க்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து ரெமோ திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து சீமராஜா திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துவிட்டு சென்றார் கீர்த்தி சுரேஷ். அந்த அளவிற்கு கீர்த்தி சுரேஷ்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷிடம் ”சிவகார்த்திகேயனுடன் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறீர்க.ள் அவர்களிடம் அவரிடம் பிடித்த ஒன்று என்ன? அவருடைய வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் கூறும் பொழுது சிவகார்த்திகேயனிடம் மிகப் பிடித்த விஷயமே அவரிடம் இருக்கும் தன்னடக்கம் தான்.
எஸ்.கேவின் வளர்ச்சி:
இவ்வளவு வளர்ந்த பிறகும் கூட முதன்முதலாக சிவகார்த்திகேயனை எப்படி பார்த்தேனோ அப்படியேதான் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பெரிய நடிகர் என்கிற திமிரே அவரிடம் நாம் பார்க்க முடியாது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்று பார்த்தால் அது அபாரமான வளர்ச்சி ஆகும்.
தமிழ் சினிமாவில் இப்பொழுது முக்கிய நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். ஒரு சமயத்தில் துப்பாக்கி திரைப்படம் வெளியான சமயத்தில் கையில் தற்சமயம் துப்பாக்கி வைத்திருப்பவனை விட துப்பாக்கி படத்தின் டிக்கெட் வைத்திருப்பவன்தான் பெரிய ஆளு என்று பதிவு போட்டார் சிவகார்த்திகேயன்.
அப்பொழுது விஜய் படத்துக்காக டிக்கெட் எடுக்கும் நிலையிலிருந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது அந்த துப்பாக்கி படத்தையே இயக்கிய ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைவிட அவரது வளர்ச்சியை பற்றி பெரிதாக எப்படி விளக்க முடியும் என்று கூறினார் கீர்த்தி சுரேஷ்.
