Actress
ட்ராஸ்பரெண்ட் ஜாக்கெட் போட்டு செம லுக்கில் கீர்த்தி சுரேஷ்!..
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பக்கம் சென்று இருக்கிறார்.
தற்பொழுது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கீர்த்தி சுரேஷின் உடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படம் வெளியாகி அது அவரின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா ஜி சுரேஷ் ஆகியோரின் மகளாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணித்தை தொடங்கினார். அதன் பிறகு மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் நடித்தார். இதற்காக அவருக்கு சைமா சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருது கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை. ஆனால் சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதை இவர் பெற்றார். இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்ததற்காக பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிய கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அவரின் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படம் அனைவரின் மத்தியிலும் பேசு பொருளானது. மேலும் இந்த திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இவர் பெற்றார்.
வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படம்
படங்களில் ஆரம்பத்தில் கவர்ச்சியை காட்டாமல் நடித்து அனைவரின் மத்தியிலும் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ், தற்பொழுது கவர்ச்சி கொஞ்சம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். இதனை கண்ட சினிமா துறையும், ரசிகர்களும் கீர்த்தியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

மேலும் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பல நிகழ்ச்சிகளிலும் மாடன் உடையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் தற்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் டிரான்ஸ்பரண்ட் பிளவுஸ் போட்டு, புடவை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது தற்பொழுது அவரின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
