Actress
ஜடை போட்டு குட்டி பொண்ணு மாதிரி மாறிய கீர்த்தி சுரேஷ்.. ட்ரெண்டாகும் பிக்ஸ்!..
பிரபல முன்னணி நடிகையாக தற்போது அனைவராலும் அறியப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா பின்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் தற்பொழுது வரை ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்.
தற்பொழுது தென்னிந்தியா மட்டும் அல்லாமல் பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சற்று கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் அவர் பல புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் தற்பொழுது வெளிவந்திருக்குமட் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். மேலும் இவருடைய தந்தை பிரபல தயாரிப்பாளரும், இவருடைய தாய் பிரபல நடிகையும் ஆவார். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

முதல் படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து படங்கள் நடித்தார் மேலும் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பெருமளவில் அவருக்கு வரவேற்பு பெற்று கொடுத்தது. அந்த படத்தில் இருந்து ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட நடிகை என்ற பெயர் கிடைத்ததோடு மட்டுமல்லாமல், தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பைரவா, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகருடன் நடித்திருக்கிறார். மகாநதி படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதனிடையில் தமிழில் வெளிவந்த தெறி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டில் நடித்து வருகிறார். இதன் மூலம் பாலிவுட்டிலும் தன்னுடைய காலடியை பதித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

சமூக வலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷ்
பல வித்தியாசமான உடைகளுடன் புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி சுரேஷ் சமீப காலங்களாக மாடலாக பிளவுஸ் போட்டு புடவை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், ஸ்டைலான உடை அணிந்து பலவிதமான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் ஜடை போட்டு குட்டி பெண் போல புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்து அவரின் ரசிகர்கள் இதில் கீர்த்தி சுரேஷை பார்ப்பதற்கு சின்ன குழந்தை போல இருப்பதாகவும், அழகாகவும் உள்ளார் என கமெண்ட் செய்தும் அவரது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.
