News
படுக்கையறை காட்சியில் நடிகர் படுத்திய பாடு.. எஸ்கேப் ஆன கீர்த்தி சுரேஷ்..
Keerthy Suresh: தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் நடித்த வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் சினிமா பின்புலத்தை கொண்டு சினிமாவில் நுழைந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள்.
அவர்களுக்கு சினிமாவில் நுழைவது என்பது எளிதான காரியம் தான். ஆனால் சினிமாவில் சாதிப்பது என்பது அவர்களின் திறமை வைத்து தான் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் சினிமா குடும்பத்திலிருந்து வந்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்தான் கீர்த்தி சுரேஷ். அவரைப் பற்றிய சர்ச்சை ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஒரு தேசிய விருது 4 சைமா விருது மற்றும் ஒரு பிலிம் பேர் விருது போன்றவற்றை பெற்றிருக்கிறார். கீர்த்தி சுரேஷின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் ஆவார். இவரின் அம்மா பிரபல நடிகையான மேனகா ஜி சுரேஷ் ஆவார்.
குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கை தொடர்ந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் இவர் இது என்ன மாயம் என்ற படத்திற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதை பெற்றார். அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பைரவா, சர்க்கார் போன்ற படங்களை நடித்திருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மகாநதி என்ன திரைப்படத்தில் பிரபல நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவருக்கு ஃபிலிம் பேர் விருது மற்றும் தேசிய விருது கொடுக்கப்பட்டது.
பிரபல நடிகருடன் காதல்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழில் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை. மேலும் காதல் காட்சி, முத்த காட்சி போன்ற காட்சிகளில் கூட இவரை கவர்ச்சியாக காண முடியாது. மேலும் இவர் தமிழில் நடித்த பல படங்களில் ரொமான்டிக் காட்சிகளிலும் குறிப்பிட்ட வரைமுறையுடன் இவர் நடித்திருப்பார்.
ஆனால் தெலுங்கு படத்தில் இவர் தற்பொழுது கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார் என தமிழ் ரசிகர்கள் இவரின் மீது கோபமாக உள்ளார்கள்.
அந்த வகையில் இவர் தெலுங்கில் நித்தின் ரெட்டி நடிப்பில் உருவாக உள்ள ஒரு படத்திற்காக பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் நித்தின் ரெட்டியுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவருடன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அவருடன் படத்தில் நடிக்க இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இதற்குக் காரணம் அவருடன் ரங்தே என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பொழுது, மிக நெருக்கமாக நடித்திருப்பார். இதனால் இது போன்ற காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் நடித்ததில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்பொழுது மீண்டும் அவருடன் நடித்தால் சர்ச்சை மீண்டும் புயலாக கிளம்பும் என்ற பயத்தில் கீர்த்தி சுரேஷ் தெறித்து ஓடி விட்டாராம். மேலும் அவருடன் படத்தில் நடிக்க கூடாது என்ற முடிவில் இருப்பதாகவும் கூறி வருகிறாராம்.
