News
விவாகரத்தை அறிவிச்ச பிறகுதான் அது நடந்துச்சு.. கோவா சென்று.. உண்மையை உடைத்த கெனிஷா..!
ஜெயம் ரவியை ஆர்த்தி விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற செய்தி சில காலங்களாக சினிமாவில் பேசப்பட்டு வந்து கொண்டிருக்கும் விஷயமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்த நாளின் பொழுது அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தியும் நீக்கினார். இதனை தொடர்ந்து இவர்கள் பிரிய போகிறார்கள் என்பது பலரும் முடிவு செய்தனர்.
கெனிஷாவின் பதில்:
அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப்போவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கும் பாடகி கெனிஷாவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் அதனால்தான் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிகிறார் என்றும் பேச்சுக்கள் எழுந்து வர துவங்கின.
இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி கூறும் பொழுது கெனிஷா வளர்ந்து வரும் ஒரு பாடகியாக இருக்கிறார். அவரை என்னுடன் சேர்த்து வைத்து பேசாதீர்கள் என்றெல்லாம் கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த கெனிஷா கூறும் போது நான் உளவியல் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு உதவி வருகிறேன்.
அந்த வகையில் ஒரு வாடிக்கையாளராகதான் ஜெயம் ரவி என்னிடம் முதன் முதலாக வந்தார். அவர் விவாகரத்து அறிவித்த பிறகு உளவியல் சார்ந்த நன்மைக்காக என்னிடம் வந்தார் அவரை ஒரு வாடிக்கையாளராக தான் நான் நடத்தினேன் அதற்காக தான் அவர் கோவாவிற்கும் வந்தார் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் கெனிஷா.
