News
விஜய் கோட்டையை தகர்த்த கேஜிஎஃப்! – சென்னையில் செம வசூல்!
பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப்2 ஒரே சமயத்தில் வெளியான நிலையில் சென்னை கலெக்சனில் கேஜிஎஃப்2 பீஸ்ட்டை முந்தியுள்ளது.

விஜய் நடித்த பீஸ்ட் ஏப்ரல் 13ம் தேதி வெளியான நிலையில், யஷ் நடித்த கேஜிஎஃப்2 அடுத்த நாளான ஏப்ரல் 14ம் தேதி வெளியானது. இரண்டு படமும் தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் நல்ல வசூலை கண்டு வருகிறது.
ஆனால் பீஸ்ட்டை விட பல பகுதிகளில் கேஜிஎஃப் அதிகம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் பீஸ்ட் மொத்தமான 36 லட்ச ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. அதேசமயம் கேஜிஎஃஒ2 62 லட்சம் ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. இதனால் சென்னையில் பீஸ்ட்டை விட கேஜிஎஃப் அதிகம் வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
