Connect with us

அமெரிக்கர்கள் பழங்குடி மக்களை இவ்ளோ கஷ்டப்படுத்துனாங்களா?.. உண்மையை தோலூரிக்கும் Killers of the flower moon திரைப்படம்!..

killers of the flower man

Hollywood Cinema news

அமெரிக்கர்கள் பழங்குடி மக்களை இவ்ளோ கஷ்டப்படுத்துனாங்களா?.. உண்மையை தோலூரிக்கும் Killers of the flower moon திரைப்படம்!..

Killers of the flower moon: கி.பி 700களில் இருந்தே அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பழங்குடிகளில் ஓசேஜ் மக்கள் முக்கியமானவர்கள்.. பிரிட்டனை சேர்ந்த இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மக்களெல்லாம் சேர்ந்து இன படு.கொலையை நிகழ்த்தி ஓய்ந்த பிறகு 19 ஆம் நூற்றாண்டில் நாகரீக மனிதர்களின் வாழ்விடங்களில் இருந்து தள்ளி ஓசேஜ் மக்களை வற்புறுத்தி ஒரு நிலத்திற்கு அனுப்பினர்.

ஒன்றுத்துக்கும் உதவாது என அமெரிக்க பிரித்தானியர்கள் நினைத்த அந்த பூமியும் கூட பூர்வகுடிகளுக்கு வாழ்வளித்தது. ஆமாம் அங்கு கச்சா எண்ணெய் கிடைத்தது. இதனை அடுத்து அவர்களது நிலத்தை ஓசேஜ் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு வாடகைக்கு விடலாம். அதற்கு வாடகை தொகையும் வருடா வருடம் ஆயில் விற்பனையில் இருந்து ராயல்ட்டி தொகையும் அவர்களை சேரும்.

இந்த நிலையில் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் ஒரு புது சட்டத்தை அறிவித்தது. ஒரு சுத்தமான ஓசேஜ் இனம் தேவையென்றால் தனக்கென ஒரு வெள்ளையனை பாதுகாவலனாக வைத்துக்கொள்ளலாம். ஒசேஜ் இனத்தவர் இறக்கும் நிலையில் அந்த ராயல்ட்டியும், சொத்துக்களும் பாதுகாவலரை சென்றடையும்.

இந்த சட்டத்திற்கு பிறகு தொடர்ந்து ஓசேஜ் பூமியில் மர்ம மரணங்கள் சம்பவிக்க துவங்கின. 1918 முதல் 1931 வரை மட்டும் 100க்கும் அதிகமான ஓசேஜ்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்காக வெள்ளையர்கள் ஓசேஜ் பெண்களை திருமணம் செய்து பிறகு அவர்களை கொலை செய்து அந்த சொத்துக்களை பெற்று வந்தனர்.

 இதனை தாமதமாகவே புரிந்துக்கொண்டனர் ஓசேஜ் மக்கள். எனவே அவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை திரட்டி ஒரு பெரும் தொகையை அரசுக்கு அளித்து இந்த இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க சொன்னார்கள். அதன் பிறகு Federal Bureau of Investigation அமைப்பு இதுக்குறித்து விசாரித்தப்போது வில்லியம் கிங் ஹேல் என்பவர்தான் இதற்கெல்லாம் காரணம் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் எர்னஸ்ட் என்னும் தன் உறவுக்கார பையனை கொண்டு ஒரு பெண்ணின் சொத்துக்களை திருடுவதற்காக அந்த பெண்ணின் குடும்பத்தையே காலி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த பிரச்சனைக்கு பிறகு யு.எஸ் காங்கிரஸ் அதன் சட்டத்தை திரும்ப பெற்றது. ஒரு ஒசேஜ் இறந்தாலும் அந்த சொத்துக்கள் மற்றொரு ஓசேஜ்க்குதான் செல்லும். வெள்ளையர் ஓசேஜை திருமணம் செய்திருந்தாலும் அவருக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது என அறிவித்தது.

இந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் Killers of the flower moon. இந்த படத்தில் ஏதோ அமெரிக்க வெள்ளையர்கள் நீதியை நிலைநாட்டியதாக காட்டினாலும் அவர்கள் பெரும் தொகையை வாங்கி கொண்டே அதை செய்தார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதே போல அதற்கு பிறகும் ஓசேஜ் மக்களுக்கான ராயல்ட்டி தொகையை கொடுப்பதில் ஏமாற்றியுள்ளது United States Department of the Interior துறை. பிறகு இதற்காக போராடி மீண்டும் 2000 இல் வழக்கு போட்டு பத்து வருடம் போராடி தங்களுக்கு சேர வேண்டிய 380 மில்லியன் அமெரிக்க டாலர்களை 2011 இல் பெற்றுள்ளனர் ஓசேஜ் மக்கள்

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top