Kung Fu panda 4 : 90ஸ் கிட்ஸ்களுக்கும் ஹாலிவுட் டப்பிங் திரைப்படங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என கூறலாம். ஏனெனில் 1990 களில் பிறந்த குழந்தைகள் வளர துவங்கிய காலகட்டங்களில்தான் ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரத் துவங்கின.
அதிலும் விசேஷமாக தமிழில் வந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அப்படி மக்கள் மத்தியில் பிரபலமான ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படத்தில் முக்கியமான திரைப்படம் குங்ஃபூ பாண்டா.
டிராகன் வாரியர் என அழைக்கப்படும் குழு கெட்டவர்களிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றும். அப்படிப்பட்ட டிராகன் வாரியர் குழுவில் சேரும் ஒரு பாண்டா கரடியின் கதைதான் குங்ஃபூ பாண்டா. குங்ஃபூ பாண்டாவை பொறுத்தவரை அதில் மனிதர்களே வர மாட்டார்கள்.

முழுக்க முழுக்க விலங்குகளின் உலகத்தில்தான் கதை நடக்கும். மேலும் மனிதர்களால் வலிமையற்ற விலங்குகளாக பார்க்கப்படும் விலங்குகள் தான் வலிமையானவையாக குங்ஃபூ பாண்டாவில் காட்டப்படும். உதாரணத்திற்கு ஆமை முயல் போன்ற விலங்குகள் குங்ஃபூ சண்டை போடுவதை அந்த படத்தில் பார்க்க முடியும்.
அதேபோல மனிதர்கள் விரும்பி ரசிக்கும் மயில் மாதிரியான பறவைகள் அதில் வில்லனாக காட்டப்படும் வினோதமும் நடக்கும். ஏற்கனவே மூன்று பாகங்கள் வந்து வெற்றி பெற்ற நிலையில் தற்சமயம் குங் பூ பாண்டா வின் நான்காம் பாகம் தயாராகியுள்ளது.
இதன் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகி உள்ளது இந்த படத்தில் ஒரு பச்சோந்தி வில்லனாக இருப்பதாக தெரிகிறது. குங் பூ பாண்டா திரைப்படத்தில் உள்ள முக்கிய அம்சமே எப்போதுமே சீரியஸான ஒரு கதாபாத்திரமாக அந்த பாண்டா கரடி மாறவே மாறாது என்பதுதான் அதை இந்த பாகத்திலும் சரியாக செய்திருக்கிறார்கள் என தெரிகிறது.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் டிரைலர் தமிழிலும் வெளியாகி உள்ளது






