மகாபாரதத்தை கையில் எடுத்த நெட்ஃப்ளிக்ஸ்.. மாஸா இருக்கும் போல.. வெளியான ட்ரைலர்.!
உலக அளவில் பல நாடுகளில் பல வகையான புராண கதைகள் அதிக பிரபலமானவையாக இருக்கின்றன. இந்திய அளவில் அப்படி மிக பிரபலமான ஒரு கதையாக மகாபாரத கதை இருக்கிறது.
கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான கதாபாத்திரங்கள் இடம் பெறும் ஒரு பெரிய கதையாக மகாபாரதம் இருக்கிறது. ஹாலிவுட்டில் வெளியான கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரியான சீரியஸ்களை விட பெரிய கதை அம்சத்தை கொண்ட புராண கதை என்றாலுமே கூட மகாபாரதம் உலக அளவில் பெரிதாக பிரபலமடையவில்லை.
இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மகாபாரத குருசேத்திர போரை படமாக்கி இருக்கிறது. முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக தயாராகி இருக்கும் இந்த படம் அதிக வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது படத்தின் அனிமேஷன் காட்சிகளானது ஹாலிவுட் தரத்திற்கு இல்லை என்றாலும் கூட ஓரளவுக்கு பரவாயில்லை என்கிற நிலையில் இருக்கிறது..
நாளை நெட்ப்ளிக்சில் வெளியாக இருக்கும் இந்த சீரிஸின் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.