Actress
நடிகை எல்லாம் விருப்பப்பட்டுதான அதுக்கு போறாங்க!. குஷ்புவை கடுப்பேத்திய பத்திரிக்கையாளர்..!
சினிமா துறையில் தற்போது பெரும் பேசு பொருளாக இருப்பது நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை தான். விவாதங்கள் வரை சென்றுள்ள இந்த பிரச்சனை தற்போது அனைவரின் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்த சில அறிக்கைகள் தமிழ் திரையுலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இது குறித்து பிரபல பத்திரிகையாளர் குஷ்வுடன் கேள்வி கேட்டதற்கு அவர் கூறியிருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை குஷ்பூ
நடிகை குஷ்பூ தமிழ் திரையுலகில் பலராலும் அறியப்படும் நடிகையாவார். சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் தன்னுடைய பயணத்தை தொடங்கிய குஷ்பூ 80களில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கை தொடங்கி 90களில் முன்னணி கதாநாயகியாக கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பல படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, மேடைகளில் பேசுவது சர்ச்சையாகி வரும் நிலையில், சமூகத்தில் நடக்கும் பல வன்முறைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினையை பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதற்கு குஷ்பு கோபப்பட்டு கூறி இருக்கும் தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதில் கூறிய குஷ்பூ
இந்நிலையில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட குஷ்புவிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினையை பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். பத்திரிக்கையாளர் “சினிமாவில் நடிகைகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு இவ்வாறு இயக்குனர்களும், நடிகர்களும், பத்திரிகையாளரோ அவரை பாலியல் ரீதியாக அணுகும் போது ஏன் நடிகைகள் மறுப்பு தெரிவிப்பதில்லை என கேள்வி கேட்டார்.”
அதற்கு குஷ்பு எல்லோரும் என்னைப் போல தைரியமாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் இதற்கு பணிந்து தான் செல்கிறார்கள். இதற்கு காரணம் அவரின் குடும்ப சூழ்நிலை எனக் கூறியிருந்தார்.

ஆனால் பத்திரிக்கையாளர் ஒரு நடிகையிடம் மற்ற நபர்கள் பாலியல் ரீதியாக கேட்கும் போது மறுப்பு சொல்வதற்கு என்ன தைரியம் வேண்டும் என கேட்டார். சினிமாவில் சாதிக்க வேண்டும் அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவில் சம்பாதிக்க வரும் நடிகைகளுக்கு இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ, நடிகர்களோ அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் நடிகைகளுக்கு தொந்தரவு செய்யும் போது நடிகைகள் ஆரம்பத்திலேயே அதை மறுத்தால் அவர்களுக்கு ஏன் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட போகிறது?
ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவிக்காமல் அவர்களுடன் இணங்கி செல்வது தான் இவ்வாறான பிரச்சனைகளுக்கு வழிவகிக்கிறது என பத்திரிக்கையாளர் கூறினார்.
ஆனால் குஷ்பு இவ்வாறு நடிகைகள் யாரும் தைரியமாக மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். அதற்கு காரணம் அவர்களின் குடும்ப பின்னணியாக இருக்கும். இது போன்ற ஒரு விஷயம் ஒரு நடிகைக்கு நடக்கும் போது அப்போதே அவர் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் மறுப்பு சொல்வதற்கே அங்கு அவருக்கு தைரிய வேண்டும் எனக் கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
