குளிரில் நடுங்கிய விஜய்.. காஷ்மீரில் நடந்த கட்டிப்பிடி வைத்தியம்! – உண்மையை உளறிய லியோ பட வில்லன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் ஒரு படம் லியோ. இந்தப் படத்தின் முதல் சிங்கில் பாடல் வெளியாகி செம வைரலாகி வந்த நிலையில் எப்போது ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று வீடியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

ட்ரெய்லர் வெளியானது முதலே பல மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் சாதனைகளையும் படைத்து வருகிறது. டைலர் வந்ததில் இருந்தே படத்தில் ஒரு விஜய்யா? இரண்டு விஜய்யா? என்ன கதை? என தொடர்ந்து பலரும் பல்வேறு யூகங்களை வைத்து வருகின்றனர். அதை எல்லாம் தாண்டி ஒரு விமர்சனமும் படத்தின் மீது இருந்து வருகிறது.

அது என்னவென்றால் இந்த படத்தின் கதை 2005 ல் ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற படத்தின் கதைதான் என்பது. தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதிலும் பல காட்சிகள் கதை அமைப்புகள் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் லியோ படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பேட்ரிக் ஒரு பேட்டியில் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தில் உள்ள கிளைமேக்ஸ் காட்சிக்கும் லியோ படத்தில் உள்ள கிளைமாக்ஸ் காட்சிக்கும் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று பேசியுள்ளார். மேலும் காஷ்மீரில் ஷூட்டிங் சமயத்தில் குளிரால் நடுங்கிய விஜய் “நண்பா கொஞ்ச நேரம் உங்கள கட்டிப்பிடிச்சிக்கிறேன்” என கூறி பேட்ரிக்கை கட்டிப்பிடித்துக் கொண்டாராம்.

அவர் தெரியாத்தனமாக ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸை குறிப்பிட்டு சொல்லி இருந்தாலும் ஏற்கனவே அந்த படத்தின் தழுவல் தான் இது என்று பேசி வருவதால் தற்போது இது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை தமிழில் எடுக்க முன்னரே லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.