News
தமிழ் சினிமாவிலேயே அப்படி ஒரு திறமை பரத் பட இயக்குனருக்குதான் உண்டு!.. லிங்குசாமியையே ஆட்டி பார்த்த சம்பவம்!.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் லிங்குசாமி. அவர் இயக்கிய திரைப்படங்களில் ரன் சண்டக்கோழி மாதிரியான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் எனலாம்.
நிறைய வெற்றி படங்களை கொடுத்தப்போதிலும் கூட அவரையே ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலாஜி சக்திவேல்தான். இவர் தமிழில் சாமுராய், காதல், கல்லூரி மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகராக, இயக்குனராக இருந்தாலும் ஒரு கதை நல்ல வெற்றியை கொடுக்குமா இல்லையா என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியாது. எல்லா படத்தையுமே நல்ல வெற்றியை கொடுக்கும் என்றுதான் ரிலீஸ் செய்வார்கள்.
ஆனால் எல்லா படங்களும் அந்த வெற்றியை கொடுப்பதில்லை. ஆனால் ஒரு படத்தின் கதையை கேட்டவுடனேயே அது வெற்றி பெறுமா இல்லையா என்பதை முகத்திற்கு நெரே கூறிவிடுவாராம் பாலாஜி சக்திவேல். பெரும்பாலும் அவர் சொல்வது போல்தான் நடக்கும் என்கிறார் லிங்குசாமி.
உதாரணத்திற்கு ரன் திரைப்படத்தின் கதையை நான் பாலாஜி சக்திவேலிடம் கூறியப்போது இந்த கதையில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாதே அப்படியே அதை படமாக்கு என கூறினார். அந்த படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என்றார். அதே போல அந்த படம் எனக்கு மிகப்பெரிய வெற்றி படமாக் அமைந்தது என்கிறார் லிங்குசாமி.
