தேவயானி புருஷன் மட்டும் அந்த ஒரு விஷயம் பண்ணலைனா… மனம் திறந்த லிங்குசாமி!..

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனருக்கு அவரது முதல் பட வாய்ப்பு என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். எவ்வளவு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தாலும் முதல் படத்திற்கான வாய்ப்பை முன்பெல்லாம் அவ்வளவு எளிதாக பெற்றுவிட முடியாது.

ஆனால் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிக எளிதாகவே தயாரிப்பாளர்கள் கிடைக்கின்றனர். ஏனெனில் படங்களுக்கான பட்ஜெட்டும் தற்சமயம் தமிழ் சினிமாவில் விரிவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி அவரது முதல் படத்தின் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனந்தம் என்கிற திரைப்படம்தான் லிங்குசாமிக்கு முதல் திரைப்படம். முதல் படத்திற்கு கொஞ்சம் பெரிய நட்சத்திரங்களை எல்லாம் ஒன்று திரட்டி கதையும் கொஞ்சம் பெரிய கதையாக எழுதி இருந்தார் லிங்குசாமி. இதனால் முதல் படத்திற்கு எங்கேயுமே தயாரிப்பாளரே கிடைக்கவில்லை.

Social Media Bar

இந்த நிலையில் அப்போது இயக்குனராக இருந்த தேவயானியின் கணவர் ராஜகுமாரன், லிங்குசாமியுடன் நல்ல நட்பில் இருந்தார். அவர் லிங்குசாமியை அழைத்து அதன் கதையை கேட்டார். கேட்ட பிறகு இந்த மாதிரியான குடும்ப கதைகளை எல்லாம் ஆர்.பி சௌத்ரி கண்டிப்பாக தயாரிப்பார்.

நான் அவரிடம் இதைப் பற்றி கூறுகிறேன் என்று கூறிய ராஜகுமாரன் ஆர்.பி சௌத்ரியிடம் இந்த கதை குறித்து பேசுகிறார். பிறகு லிங்குசாமியை நேரில் அழைத்த ஆர்.பி சௌத்ரி அவரிடம் கதையை கேட்டுள்ளார். எனவே லிங்குசாமி மேலோட்டமாக கதையை கூறியுள்ளார்.

அதன் பிறகு அவரிடம் திரைக்கதையை வாங்கிய ஆர்.பி.சௌத்ரி இரண்டு நாட்கள் உட்க்கார்ந்து அந்த கதையை படித்தார். படித்ததும் அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்து விட்டது இந்த படம் எப்படியும் நல்ல வரவேற்பை பெறும். இதனை நான் தயாரிக்கிறேன் என்று கூறி லிங்குசாமிக்கு வாய்ப்பளித்திருக்கிறார். எனவே தமிழ் சினிமாவில் லிங்குசாமி உள்ளே வருவதற்கே முக்கியமாக உதவியுள்ளார் தேவயானியின் கணவர் ராஜகுமாரன்.