Anime
க்ரஞ்சிரோலில் தமிழ் டப்பிங்கில் வந்த அனிமே லிஸ்ட்!.. இதோ!..
தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் அனிமே கார்ட்டூன்கள் பிரபலமாகி வருகின்றன. 90ஸ் காலங்களில் தமிழ் நாட்டில் ட்ராகன் பால் சி என்னும் அனிமே மிகவும் பிரபலமாக இருந்தது. அதன் பிறகு ஹெய்டி என்கிற அனிமே தொடர் சுட்டி டிவியில் தமிழில் வெளியானது. அதனையடுத்து சின்ச்சான் தொடர் பிரபலமானது.
எனவே அனிமே தொடருக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் இருப்பதை பார்த்த க்ரஞ்சிரோல் என்னும் ஓ.டி.டி நிறுவனம் ஜப்பானில் பிரபலமாக இருக்கும் அனிமேக்களை தமிழ் டப்பிங் செய்து வருகிறது.
இதனையடுத்து தற்சமயம் ஜிஜிட்சு கெய்சன், டீமன் ஸ்லேயர், மை ட்ரஸ் அப் டார்லிங், வின்லேண்ட் சகா ஆகிய நான்கு தொடர்கள் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. இதற்கு மக்களிடம் ஆதரவு இருக்கும் பட்சத்தில் இன்னும் அதிக தொடர்கள் தமிழில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
