News
படிக்கட்டில் ஏறும்போது யோசிச்ச கதை!.. கமல்ஹாசனுக்கே விபூதி அடிச்ச லிவிங்ஸ்டன்!..
சிறு வயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனுக்கு எந்த காலத்திலும் தமிழ் சினிமாவில் வரவேற்பு குறைந்ததே இல்லை. அதிகமான வரவேற்பை பெற்றதற்கு அவரது நடிப்பே முக்கிய காரணமாக இருந்தது.
அவருக்கு கதை எழுதியது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் லிவிங்ஸ்டன் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். காக்கி சட்டை படத்திற்கான கதையை லிவிங்ஸ்டன் தான் எழுதினார். பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த லிவிங்ஸ்டன் அவரை விட்டு பிரிந்து வந்த பிறகு படம் எடுக்க ஆசைப்பட்டார்.
ஆனால் அவரிடம் கதை எதுவும் இல்லை. இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளர் கதை கேட்பதற்காக லிவிங்ஸ்டனை அழைத்தார். அங்கு செல்லும்போதுதான் பாலுமகேந்திரா குறித்த ஒரு விஷய்த்தை லிவிங்ஸ்டன் பேசி வந்தார். அதாவது பாலு மகேந்திரா போலி ஆவணங்களை கொடுத்துதான் சினிமா பயிற்சி கல்லூரியில் சேர்ந்தாராம்.
அதையையே அப்படியே கதையாக மாற்றினார் லிவிங்ஸ்டன். நாட்டுக்கு நல்லது செய்ய ஆசைப்படும் ஒருவன் போலி சான்றிதழ் கொடுத்து போலீஸ் ஆக பார்க்கிறான். இந்த கதை தயாரிப்பாளருக்கு பிடித்தது. ஆனால் படம் கடைசியில் கை மாறி கமல்ஹாசனிடம் வந்தது.
அவருமே கூட அந்த கதை சிறப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். ஆனால் வெறும் 5 நிமிடத்தில் யோசித்த கதைதான் காக்கி சட்டை படம் என்பதை லிவிங்ஸ்டன் தனது பேட்டியில் கூறியுள்ளார். பொதுவாக கதை விஷயத்தில் கமல்ஹாசனை யாரும் ஏமாற்ற முடியாது என்று திரைத்துறையில் ஒரு பேச்சு உண்டு. ஆனால் 5 நிமிடத்தில் யோசித்த கதையை கமலிடமே ஓ.கே செய்துள்ளார் லிவிங்ஸ்டன்.
