எல்.சி.யுல வர்ற அடுத்த படம்..! இதுதான் கதை.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இதற்கு நடுவே எல்.சி.யு என்கிற ஒரு விஷயத்தை லோகேஷ் கனகராஜ் துவக்கி வைத்துள்ளார். எல்.சி.யுவில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களை ஒன்று சேர்த்து படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

எல்.சி.யு படங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பெரிய ப்ளான் வைத்துள்ளார். இந்த நிலையில் அதற்கான திரைப்படங்களை வரிசையாக வெளியிட இருக்கிறார். கூலி படத்திற்கு பிறகு அடுத்த படங்களுக்கான வேலைகள் நடக்கும்.

எல்.சி.யு திரைப்படம்:

Social Media Bar

இந்த நிலையில் தற்சமயம் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அந்த போஸ்டரில் 1 Shot, 2 Stories, 24 Hours என எழுதப்பட்டுள்ளது.

ஒரு ஷாட் என குறிப்பிட்டிருப்பது துப்பாக்கி சூட்டை குறிப்பதாக உள்ளது. அந்த துப்பாக்கி சூடு தொடர்பாக இரண்டு கதைகள் நடக்க இருக்கின்றன. அந்த கதையானது ஒரு நாளில் நடக்கும் கதையாக இருக்கும். அதைதான் 24 மணி நேரம் என குறிப்பிட்டுள்ளனர். இது எல்.சி.யுவின் முன்கதை என்றும் 10 நிமிட கதை என்றும் குறிப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.