Connect with us

விஸ்வரூபம் எடுத்த BSNL… இண்டர்நெட் சேவையில் புதிய பாய்ச்சல்..! 500+ டிவி சேனல்கள்..! தமிழகத்திற்கு புது ஆஃபர்கள்..!

bsnl 2

News

விஸ்வரூபம் எடுத்த BSNL… இண்டர்நெட் சேவையில் புதிய பாய்ச்சல்..! 500+ டிவி சேனல்கள்..! தமிழகத்திற்கு புது ஆஃபர்கள்..!

Social Media Bar

தற்சமயம் தொடர்ந்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக நிறைய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்சமயம் பி.எஸ்.என்.எல் குறைந்த விலையில் நிறைய சலுகைகளை வழங்கி வரும் நிறுவனமாக இருந்து வருகிறது.

இருந்தாலும் இணையத்தை பொறுத்தவரை இன்னமுமே மற்ற நிறுவனங்கள் அளவிற்கு அதிவேக இணையத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் வழங்க முடியவில்லை.

bsnl

bsnl

இந்த நிலையில் தற்சமயம் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது BSNL. இந்த நிலையில் BSNL IFTV service என்னும் புது சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் எஃப்.டி.டிஹெச் யூசர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய சேவைகள்

ஏற்கனவே ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறுவனங்களும் இதே போல இணைய பயனர்களுக்கு டிவி சேனல்கள் மற்றும் ஓ.டி.டி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு போட்டியாக BSNL நிறுவனமும் களம் இறங்கியுள்ளது.

இது கண்டிப்பாக BSNL நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் BSNL நிறுவனம் அன்லிமிடேட் லேன்லைன் கால்களையும் வழங்குகிறது.

Bigg Boss Update

To Top