News
அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை.. கைதாகும் லப்பர் பந்து பட நடிகை.. இப்பதான் ஃபேன்ஸ் வந்தாங்க.. அதுக்குள்ளவா?
கேரள சினிமாவில் தொடர்ந்து இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் என்பது இருந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் இது குறித்த சர்ச்சைகள் தீரவில்லை என்று கூறவேண்டும்.
கேரளாவில் தொடர்ந்து பாலியல் தொல்லைகள் நடந்து வருவதை அடுத்து அரசு அதை கண்காணிக்கும்படி ஹேமா கமிட்டி என்கிற ஒரு அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிறைய நடிகைகளிடம் வாக்குமூலம் வாங்கி அதன் மூலமாக கேரள சினிமாவில் நடந்து வரும் பாலியல் அத்துமிறல்களை வெளிக்கொண்டு வந்தது.
இப்படியாக ஹேமா கமிட்டி கொண்டு வந்த அறிக்கைகளில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் நிறைய நடிகைகள் முன் வந்து தைரியமாக தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து இதில் கூறி இருக்கின்றனர்.
நடிகைக்கு வந்த பிரச்சனை:
ஆனால் பல பிரபலங்கள் இப்படி கூறிய நடிகைகளை கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். அந்த வகையில் லப்பர் பந்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கூட மலையாள நடிகைகள் குறித்து தவறான கருத்துக்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் இதனால் கோபமடைந்த மலையாள சினிமாவில் இருக்கும் மற்ற நடிகை ஒருவர் இவர் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இவருடன் சேர்த்து மேலும் இரண்டு நடிகைகள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இப்பொழுது தான் சஞ்சனாவிற்கு தமிழில் ரசிகர்கள் உருவாக துவங்கினார்கள். ஆனால் இந்த பிரச்சனையின் காரணமாக அவருக்கு இருக்கும் ரசிகர்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
