Connect with us

ஏற்கனவே கமல் படத்தை கை மாத்தியாச்சி!.. அடுத்து அஜித்தா!.. நெருக்கடியில் லைகா நிறுவனம் எடுக்கும் முடிவுகள்!..

kamal ajith

News

ஏற்கனவே கமல் படத்தை கை மாத்தியாச்சி!.. அடுத்து அஜித்தா!.. நெருக்கடியில் லைகா நிறுவனம் எடுக்கும் முடிவுகள்!..

Social Media Bar

Lyca Production : தொடர்ந்து பெரிய படங்களாக தயாரித்து வந்ததால் தற்சமயம் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது லைக்கா நிறுவனம். தமிழ் சினிமாவில் பெரும் திரைப்படங்களை எடுக்கும் நிறுவனங்களில் லைக்கா நிறுவனம் முக்கியமான நிறுவனம் ஆகும்.

வெளிநாடுகளில் தொழிலதிபராக இருந்து வரும் சுபாஸ்கரன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் தமிழ் படங்கள் அதிகபட்சம் சன் பிக்சர்ஸ் அல்லது லைக்கா நிறுவனத்தின் மூலமாகத்தான் எடுக்கப்பட்டு வருகின்றன.

lyca
lyca

இந்த நிலையில் நிறைய திரைப்படங்களில் ஒரே நேரத்தில் கமிட் ஆனதால் தற்சமயம் சிக்கலில் சிக்கியிருக்கிறது லைக்கா நிறுவனம். அஜித் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடா முயற்சி. இந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்கமாக செலவாகி வருகிறது இதற்கு நடுவே நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

சிக்கலில் லைக்கா நிறுவனம்:

இவை மட்டும் இல்லாமல் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் ஆகிய திரைப்படங்களையும் தயாரித்து வருகின்றன. இந்த மூன்று திரைப்படங்களுக்குமே எக்கச்சக்கமான செலவுகள் ஆகி வருவதால் தற்சமயம் திரைப்படம் தயாரிப்பதிலேயே லைக்கா நிறுவனத்திற்கு தொய்வு ஏற்பட்டுள்ளது என்று கூற வேண்டும்.

indian-2
indian-2

ஏற்கனவே இந்தியன் திரைப்படத்தின் தயாரிப்பு செலவை தாங்க முடியாமல் லைக்கா நிறுவனம் தற்சமயம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் கூட்டணி போட்டு அந்த படத்தை தயாரித்து வருகிறது. இதற்கு நடுவே விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே வேட்டையன் திரைப்படத்தை முழுவதுமாக தயாரித்து வெளியிட்ட பிறகு அதில் வரும் லாபத்தை வைத்து விடாமுயற்சி படத்தை தொடரலாம் என்று நினைத்தனர்.

ஆனால் ஜூலை மாதத்திற்கு பிறகு அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறியிருப்பதால் அதற்கு முன்பு விடாமுயற்சி திரைப்படத்தை முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தற்சமயம் போனி கபூரிடம் இதற்காக உதவி கேட்டிருக்கிறதாம் லைக்கா நிறுவனம். எனவே இதில் இணை தயாரிப்பாளராக போனிகபுரும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ளன.

To Top