கைல காசு இல்லப்பா… ஆசையோடு வந்த சங்கரை அப்படியே அனுப்பிய லைக்கா!..

2018 இல் வெளிவந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 6 வருடங்களாக இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் படம் எதுவும் தமிழ் சினிமாவில் வரவில்லை. மற்ற மொழிகளில் 1000 கோடிகள் ஹிட் கொடுக்கும் வகையில் படங்கள் வந்துக்கொண்டிருக்கும்போது தமிழில் மட்டும் இப்போது வரை எந்த படங்களும் 1000 கோடி ஹிட் கொடுக்கவில்லை.

கண்டிப்பாக ஷங்கர் இயக்கும் திரைப்படத்தால்தான் அப்படியான வெற்றியை கொடுக்க முடியும் என்பது பலரது ஆவலாக இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் வரிசையாக 3 படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர்.

Social Media Bar

இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் தயாராகி வருகின்றன. பொதுவாகவே ஷங்கர் தனது திரைப்படங்களின் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு அதிக செலவு செய்வார்.

இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கான ஒரு பாடல் மட்டும் இன்னமும் படமாக்கப்படாமல் இருக்கிறது. இந்த பாடலை தயாரிக்க மட்டும் பல கோடிகளை லைக்கா நிறுவனத்திடம் கேட்டுள்ளாராம் ஷங்கர்.

ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் லைக்கா நிறுவனம் தற்சமயம் இந்த பாடலை படமாக்க முடியாது. எனவே இந்த பாடல் இல்லாமலே படத்தை வெளியிட்டு விடலாம் என கூறியுள்ளதாம். இதனால் இயக்குனர் ஷங்கர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.