கோடிக்கணக்குல குடுத்தும் ஏமாத்திட்டாங்க! – ’லைகா’ சுபாஸ்கரன் வேதனை?

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்‌ஷன்ஸின் நிறுவனர் சுபாஸ்கரன். லைகா நிறுவனம் தமிழில் கத்தி, 2.0, பொன்னியின் செல்வன் என முன்னணி ஹீரோக்களின் பிரம்மாண்ட படங்கள் பலவற்றை தயாரித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெறும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதற்கான வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சுபாஸ்கரன் லண்டனிலிருந்து சென்னை வந்திருந்தார்.

அவர் லீலா பேலஸில் தங்கியிருந்த நிலையில் அங்குதான் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவும் நடைபெற்றது. ஆனால் அதில் சுபாஸ்கரன் கலந்து கொள்ளவில்லையாம். கமல்ஹாசனுக்கு இந்தியன் 2, சபாஷ் நாயுடு உள்ளிட்ட படங்களுக்காக அட்வான்ஸ் தொகையாக சில கோடிகளை அளித்தவர் சுபாஸ்கரன். அதுபோல மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்துள்ளார்.

ஆனால் மணிரத்னமும், கமல்ஹாசனும் இணையும் மெகா கூட்டணிக்கு சுபாஸ்கரனை அணுகாமல் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் தயாரிப்பில் அந்த படம் சென்றுள்ளது அவரை வருத்தம் கொள்ள செய்துள்ளதாம். இத்தனை பெரிய படங்கள் அவர்களுக்கு தயாரித்த நிலையில் இவர்கள் இணையும் கூட்டணி படம் குறித்து தெரிவிக்காததால் கமல்ஹாசனின் பிறந்தநாளில் கலந்து கொள்ளாததுடன் முன்னதாகவே லண்டனுக்கு பறந்துவிட்டாராம் சுபாஸ்கரன்.

Refresh