நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மதராஸி ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படங்களைப் பொறுத்தவரை அவரது திரைப்படங்கள் சிறப்பான கதை அம்சத்தை கொண்டிருக்கும் என்பதாலேயே அதிக வரவேற்பை பெறுவது உண்டு.
அந்த வகையில் மதராஸி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக படத்தில் சண்டை காட்சிகளை வித்தியாசமாக செய்திருப்பதாக கூறுகின்றனர். ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல சண்டை காட்சிகள் அமைந்திருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த படம் வெளியான மூன்று நாட்களில் 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அமரன் திரைப்படத்திற்கு இணையான ஒரு வெற்றியை மதராஸி கொடுக்குமா என்று தெரியவில்லை என்றாலும் கூட 100 கோடியை தாண்டி இந்த படம் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









