ஒரே வாரத்தில் இவ்வளவு வசூலா.. சாதனை படைத்த இந்திய அனிமேஷன் திரைப்படம்..!
கே ஜி எஃப், சலார் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹம்பாலே ஃபிலிம்ஸ் திரைப்படம் தற்சமயம் தொடர்ந்து சாமி திரைப்படங்களாக இயக்கி வருகிறது.
காந்தாரா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நிறைய சாமி படங்களை இயக்கி வருகிறது ஹம்பாலே பிலிம்ஸ். அந்த வகையில் தற்சமயம் ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம்நான் மகா அவதார் நரசிம்மா.
விஷ்ணு பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான ஒரு அவதாரமாக நரசிம்மா அவதாரமாக பார்க்கப்படுகிறது. பழைய ங்காலங்களில் இருந்தே இரணிய கசிபு மற்றும் நரசிம்ம அவதாரத்தின் கதையானது நாடகங்களாக இந்திய அளவில் போடப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் இதை அனிமேஷன் திரைப்படமாக அஸ்வின் குமார் என்கிற இயக்குனர் இயக்கி இருந்தார். கடந்த ஜூலை 25ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பொதுவாக இந்திய மக்கள் மத்தியில் அனிமேஷன் படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடையாது.
ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் 40 கோடி வசூல் செய்து இருக்கிறது. எந்த ஒரு பெரிய கதாநாயகனும் நடிக்காமல் பெரிய இயக்குனர் இயக்காமல் உருவான ஒரு அனிமேஷன் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் இனி அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்திய சினிமாவில் ஒரு மார்க்கெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.