Cinema History
அஜித்திற்கு தல பட்டத்தை வழங்கிய நடிகர்.. கட்டிப்பிடித்த அஜித்..!
நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட இன்னொரு நடிகர் என்றால் நடிகர் அஜித் தான். இப்பொழுது நடிகர் விஜய்யும் அரசியலுக்கு சென்று விட்டதால் தமிழில் முக்கிய டாப் நடிகராக அஜித்குமார் இருக்கிறார்.
அதே சமயம் அஜித்துக்கு கார் ரேஸ் மாதிரியான விஷயங்கள் மீது அதிக ஆர்வம் இருந்து வருவதால் திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் இந்த விஷயங்களின் மீது அவர் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் குறைவான திரைப்படங்களிலேயே நடித்து வந்து கொண்டிருக்கிறார் அஜித். அஜித்தை பெரும்பாலும் ரசிகர்கள் தல என்று அழைப்பதுதான் வழக்கம்.
பல வருடங்களாக இந்த தல என்கிற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது அதற்கு முதன் முதலில் இவர் யார் இந்த பெயரை வைத்தது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. முதன்முதலாக அஜித்தை தல என்று அழைத்தது மகாநதி சங்கர் அவர்கள் தான்.
மகாநதி சங்கர் அவர்கள் தீனா திரைப்படத்தில் ஒரு காட்சியில் தல என்று அஜித்தை அழைத்து இருப்பார். அதற்கு பிறகு ரெட் திரைப்படத்தில் அஜித்தின் பெயரை தல என்றே வைக்கப்பட்டது. அப்படியாக தல என்கிற பெயர் அஜித்தின் அடையாளமாக மாறியது.
இது குறித்து மகாநதி சங்கர் பேட்டியில் கூறும் பொழுது துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது நான் அஜித்தை சந்தித்தேன் அப்பொழுது அவர் என்னை கட்டிப்பிடித்து எனக்கு அருகில் இருந்தவரிடம் இவர் தான் எனக்கு தல என்கிற பெயரை வைத்தவர் என்று பெருமையாக கூறிக் கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார் மகாநதி சங்கர்.
