News
எமனாக மாறிய கோதுமை… பாதிக்கப்பட்ட கிராம மக்கள்..
பெரும்பாலும் மக்கள் பெரிதாக யோசிக்காமல் உண்ணும் உணவுகள் என்றால் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள்தான். ஆனால் அவற்றிலேயே பிரச்சனை ஏற்படும் போது அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அப்படி ஆனால் ஒரு சம்பவம் இந்தியாவில் சமீபத்தில் நடந்திருக்கிறது மகாராஷ்டிராவில் உள்ள குல்தானா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கோதுமை சாப்பிட்டதால் பல பிரச்சினைகளை அனுபவித்து இருக்கின்றனர் கிராம மக்கள்.
கோதுமையை சாப்பிட்டதால் 217 க்கும் அதிகமான கிராம மக்களுக்கு முடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நிறைய உடல் உபாதைகளும் ஏற்பட்டுள்ளது. பிறகு இதை ஆய்வு செய்த குழு ரேஷனில் வழங்கப்பட்ட கோதுமையால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கின்றனர்.
மகாராஷ்டிராவை தவிர்த்து பஞ்சாப் மாதிரியான மற்ற மாநிலங்களில் இருந்து வந்த கோதுமையில் செலினியத்தின் அளவு அதிகமாக இருப்பதாகவும் இதுதான் இந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் தலை முடி இழந்தவர்களின் முடியிலும் செலினியத்தின் அளவு அதிகமாக இருப்பதை அவர்கள் பார்த்துள்ளனர்.
