Tamil Trailer
ஹாலிவுட்டிற்கு இணையான நரசிம்ம அவதார திரைப்படம்.. கே.ஜி.எஃப் நிறுவனம் செய்த சம்பவம்.. Mahavatar Narsimha Official Tamil Trailer.!
கே ஜி எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து நிறைய புராண கதைகளை படமாக்குவதன் மீது இப்பொழுது கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கடவுள் தொடர்பான திரைப்படங்களை எடுப்பதன் மீது ஹம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது.
அந்த வகையில் ஏற்கனவே காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு நடுவே ரிசப் ஷெட்டி நடிப்பில் ஜெய் ஹனுமான் என்கிற ஒரு திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம்.
இந்த நிலையில் மகா அவதார் நரசிம்மா என்கிற ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறது ஹம்பாளே பிலிம்ஸ். இந்த திரைப்படத்தை அஸ்வின் குமார் இயக்குகிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
முழுக்க முழுக்க இந்த திரைப்படம் அனிமேஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவை பொறுத்தவரை அனிமேஷன் திரைப்படங்கள் அவ்வளவு திருப்திகரமான தரத்தில் இதுவரை வெளியானது இல்லை.
இந்த நிலையில் அதிக பொருள் செலவில் ஹாலிவுட்டிற்க்கு இணையான தரத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷ்ணு கடவுளின் பத்து அவதாரங்களையும் படமாக எடுக்க இருக்கின்றனர்.
இந்த படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகியிருக்கிறது பிரகலாதன் வரைக்கும் எல்லாருடைய கதாபாத்திரமும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது படத்தில் வசனங்களும் கூட சிறப்பாக அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது.
