Connect with us

கோமாளிகளில் முக்கியமான கோமாளி நீதான்! –  மணிமேகலை குறித்து மனம் உருகிய வெங்கடேஷ் பட்!

TV Shows

கோமாளிகளில் முக்கியமான கோமாளி நீதான்! –  மணிமேகலை குறித்து மனம் உருகிய வெங்கடேஷ் பட்!

Social Media Bar

சன் மியூசிக் தொடரில் விஜேவாக இருந்து தற்சமயம் சின்னத்திரையில் பெரும் உயரங்களை தொட்டிருப்பவர் மணிமேகலை. விஜய் டிவி பார்க்கும் நேயர்கள் அனைவருக்கும் தெரிஞ்ச ஒரு பெயராக மணிமேகலை இருக்கும். அந்த அளவிற்கு தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் மணிமேகலை.

குக் வித் கோமாளி தொடரில் பிரபலமான கோமாளியாக மணிமேகலை இருந்து வருகிறார். கடந்த இரண்டாவது சீசனில் துவங்கி வரிசையாக நான்காவது சீசன் வரை மணிமேகலை இருந்து வருகிறார். ஏற்கனவே இந்த வருடம் பாலா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் மணிமேகலையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். குக் வித் கோமாளியில்  மணிமேகலைக்கு என்று ஒரு ரசிக வட்டாரம் உண்டு.  அவர்கள் அனைவரும்  இதனால் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் மணிமேகலைக்கு பதிலளிக்கும்போது “உள்ள பெண் கோமாளிகளிலேயே நீதான் சிறந்த கோமாளி. நீ போவது என்பது குக் வித் கோமாளிக்கு ஒரு இழப்புதான். ஆனால் உன்னுடன் இருந்த நாட்களை நாங்கள் நினைவுகூர்வோம்” என மிகவும் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

To Top