3 மாசம் சம்பளம் இல்லாமல் எப்படி வேலை பார்க்க முடியும்.. மணிரத்தினம் படத்தில் அவதிக்குள்ளான உதவி இயக்குனர்கள்!..

Director Maniratnam: தமிழில் மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்த இயக்குனர்களில் மணிரத்தினம் முக்கியமானவர். மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் மற்ற இயக்குனர்கள் படத்தில் இருந்து மாறுப்பட்டு இருக்கும். முக்கியமாக அவரது படத்தின் ஒளிப்பதிவு மற்றும் வசனங்கள் வேறு மாதிரி இருக்கும்.

இதனாலேயே மணிரத்தினத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஓரளவு பணம் சம்பாதித்த பிறகு மணிரத்தினம் திரைப்படங்களை தயாரிக்கவும் துவங்கினார். அப்படி அவர் தயாரித்த திரைப்படம்தான் நேருக்கு நேர். இந்த படத்தில் விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்தனர்.

Social Media Bar

இந்த ஒரு படத்தில் மட்டுமே இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு விஜய் அஜித் போட்டியில் சூர்யாவும் களம் இறங்கியிருந்தார். அதனால் பிறகு அவர்கள் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. ஆசை படத்தை இயக்கிய இயக்குனர் வசந்த் இந்த படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் வேலை பார்த்த உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் மிகவும் குறைவான சம்பளத்தை வழங்கியிருந்தார் மணிரத்தினம். மேலும் கடைசி 3 மாதங்களின் போது உதவி இயக்குனர்களுக்கு ஒதுக்கப்பட்ட சம்பளம் முடிந்துவிட்டது எனவே அவர்கள் சம்பளமில்லாமல் படத்திற்கு வேலை பார்கக் வேண்டும் என கூறியிருந்தனர்.

இதனால் கோபமான உதவி இயக்குனர்கள் மணிரத்தினத்தை சந்தித்து எப்படி சார் 3 மாதம் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியும். அது இல்லாமல் ஏற்கனவே நீங்கள் எங்களுக்கு தரும் சம்பளம் குறைவாகதான் இருக்கிறது என கூறியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த மணிரத்தினம் சரி அடுத்து மூன்று மாதங்களுக்கு உங்களுக்கு சம்பளத்தை ஏற்பாடு செய்கிறேன். ஆனால் உங்கள் சம்பளத்தை நான் அதிகப்படுத்தி தர முடியாது. அதற்கு நீங்கள் இயக்குனர் ஆக வேண்டும் என கூறியுள்ளார் மணிரத்தினம்.