ஏற்கனவே ப்ரதீப் காலி அடுத்த டார்கெட் லோகேஷா!.. நேக்காக கோர்த்து விட்ட மாயா!..

தமிழில் வெகு சீக்கிரத்தில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த திரைப்படத்திற்கு வெகுவாக வரவேற்பு வந்துவிடுகிறது.

இப்போதெல்லாம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால்தான் அந்த திரைப்படம் ஓடும் என்று கிடையாது. லோகேஷ் கனகராஜ் இயக்கினாலே அந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெரும் என்கிற நிலை வந்து விட்டது.

lokesh kanagaraj
lokesh kanagaraj
Social Media Bar

எனவே லோகேஷ் கனகராஜ் சின்ன நடிகர்களை வைத்து கூட படம் இயக்குவாரா என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால் தற்சமயம் இன்னும் நான்கு படங்கள் லோகேஷ் கனகராஜ் பெரிய நடிகர்களை வைத்து எடுக்க வேண்டி இருப்பதால் இப்போது அதைப் பற்றி யோசிக்க நேரமில்லாமல் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் பேசிய மாயா கூறும் பொழுது, லோகேஷ் கனகராஜிடம் ஒரு படத்திற்கான ஸ்கிரிப்டை நான் எழுதிக் கொடுத்திருக்கிறேன் 100 நாள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வா அதற்குள் நான் படித்து வைக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார் என்று மாயா கூறினார்.

lokesh kanagaraj
lokesh kanagaraj

ஏற்கனவே மாயா யாரை பற்றி கூறினாலும் அவர்கள் தொடர்பாக விமர்சனம் அதிகரித்து வருகிறது. தற்சமயம் அந்த வலையில் லோகேஷ் கனகராஜும் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மாயாவின் கதையை எல்லாம் படமாக்கினால் அவர் சினிமாவை விட்டு செல்ல வேண்டியதுதான் என்று பேச தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

மேலும் மாயாவிற்கு லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு கொடுத்தது தப்பு என்று பேசி வருகின்றனர் மாயா ஹேட்டர்ஸ். இந்த நிலையில் இன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.