Connect with us

தனியா இருக்குறதுக்கும் தனிமையில் இருக்கிறதுக்கும் இதுதான் காரணம்.. மீனாட்சி சௌத்ரியின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்.!

Tamil Cinema News

தனியா இருக்குறதுக்கும் தனிமையில் இருக்கிறதுக்கும் இதுதான் காரணம்.. மீனாட்சி சௌத்ரியின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்.!

Social Media Bar

சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது தென்னிந்தியா போற்றும் நடிகையாக மாறியிருப்பவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. மீனாட்சி சௌத்ரி தமிழில் முதன் முதலாக சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக நடித்தார்.

அந்த திரைப்படத்திலேயே அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் நடித்தார் மீனாட்சி சௌத்ரி. ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தி கொடுத்தது.

அதற்கு பிறகு அவர் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் மூலம் வெறுமனே கவர்ச்சியாக நடிப்பது மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தாது என்பதை அறிந்தார் நடிகை மீனாட்சி சௌத்ரி.

எனவே இனி நல்ல நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் மீனாட்சி சௌத்ரி. இந்த நிலையில் மீனாட்சி சௌத்ரி இன்னமும் கூட திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தனிமையில் வாழ்வது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது நான் சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன் அந்த புத்தகத்தின் பெயர் The Art of Being Alone. தனியா இருப்பதற்கும் தனிமையில் இருப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து இந்த புத்தகம் பேசுகிறது. உங்களை நீங்களே எப்படி நேசிப்பது, உங்களுக்கு நீங்களே எப்படி சிறந்த நண்பராக்கி கொள்வது போன்றவற்றை பேசும் புத்தகம் அது என்கிறார் மீனாட்சி சௌத்ரி.

To Top