Connect with us

ஜெயம் ரவி விவாகரத்தில் திடீர் திருப்பம். உள்ளே புகுந்த பிரபல இயக்குனர்.!

jayam ravi aarthi

News

ஜெயம் ரவி விவாகரத்தில் திடீர் திருப்பம். உள்ளே புகுந்த பிரபல இயக்குனர்.!

Social Media Bar

ஜெயம் ரவி தனது விவாகரத்து குறித்த செய்தியை நேற்று இணையத்தில் வெளியிட்டது முதலே அதுதான் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. பெரும்பாலும் பெரிய நடிகர்கள் விவாகரத்து அறிவிக்கும் போது அதை மக்கள் பெரிதாக கண்டு கொள்வது கிடையாது.

ஏனெனில் இதெல்லாம் சினிமாவில் சகஜம் என்று இருந்து விடுவார்கள் ஆனால் ஜெயம் ரவி விஷயத்தில் அனைவரும் இவ்வளவு கவனம் செலுத்துவதற்கு காரணம் வழக்கமான நடிகர்களை போல பெண்கள் விஷயத்தில் ஜெயம் ரவி மோசமானவராக இருந்தது கிடையாது.

பிரபல இயக்குனர்

மேலும் அவரது குடும்பத்தின் மீது அதிக விருப்பம் கொண்டவர் ஜெயம் ரவி தொடர்ந்து தனது மகன் மீது அதிக அன்புடன் அவர் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் நடித்த டிக் டிக் டிக் திரைப்படத்தில் கூட தனது மகனுக்கு ஒரு கதாபாத்திரத்தையும் கொடுத்திருந்தார் ஜெயம் ரவி.

jayam ravi aarthi

அப்படி இருக்கும் பொழுது எப்படி விவாகரத்து பெற்று அவர்களை எல்லாம் பிரிந்து இவர் வாழ்வார் என்பது ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை அறிந்த ஜெயம் ரவியின் அண்ணனும் பிரபல இயக்குனருமான மோகன் ராஜா தற்சமயம் இந்த பிரச்சனை குறித்து ஜெயம் ரவியுடன் பேசத் தொடங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தனி ஒருவன் ஜெயம் மாதிரியான நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மோகன்ராஜா. தற்சமயம் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மோகன் ராஜா நிதானித்து முடிவு எடுக்கும்படி தனது தம்பிக்கு அறிவுரை கூறினார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top