Latest News
நண்பர்னு கூட பார்க்காமல் இப்படி செஞ்சிட்டாங்க!.. ஆர்.ஜே பாலாஜிக்கு எதிராக கூட்டு சேரும் நயன் அணி!.
நயன்தாரா நடித்த திரைப்படத்தில் நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படமாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் இருந்தது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நயன்தாராவுடன் சேர்ந்து நடித்திருந்தார்.
அந்த படத்தை வேல்ஸ் நிறுவனத்தினர் தயாரித்து இருந்தனர். மூக்குத்தி அம்மன் நல்ல வெற்றியை நயன்தாராவிற்கு பெற்றுக் கொடுத்தது. முதன் முதலில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடிப்பதாக இல்லை.
மூக்குத்தி அம்மன் படம்:
முதலில் ஆர்.ஜே பாலாஜி சுருதிஹாசனிடம் சென்றுதான் படம் குறித்து பேசி இருந்தார். அந்த படத்தில் நடிப்பதற்கு சுருதிஹாசனும் ஒப்புக்கொண்டார் அதற்கு பிறகு படத்தின் கதையை கேட்ட விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்.
மேலும் அவரிடம் சென்று இதுக்குறித்து பேசியிருக்கிறார் நயன்தாரா நயனுக்கு கதை பிடித்திருந்ததால் அந்த திரைப்படத்தில் நயன்தாராவை அம்மனாக நடிக்க வைத்தனர். இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் முதல் பாகம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.
ஹிந்தியில் வெளியான பி கே என்ற திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் மூக்குத்தி அம்மன். அந்த திரைப்படத்தை ஹிந்தியில் பார்த்த பொழுது தமிழில் எடுக்க வேண்டும் என்பது ஆர் ஜே பாலாஜி ஆசையாக இருந்தது ஆனால் அதற்கான தமிழ் காப்புரிமையை ஏற்கனவே வேறு ஒரு தயாரிப்பாளர் வாங்கிய நிலையில் வேறு வழியில்லாமல் புதுக்கதையாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அவர் நடித்தார்.
மாசாணி அம்மன்:
அதனை தொடர்ந்து தற்சமயம் மாசாணி அம்மன் என்கிற இன்னொரு திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடிக்க இருக்கிறார். இதில் அம்மனாக நடிப்பதற்கு முதலில் நயன்தாராவிடம்தான் இவர் சென்று பேசினார் என்று கூறப்படுகிறது.
ஆனால் நயன்தாராவின் சம்பளம் படத்தின் பட்ஜெட்க்கு செட்டாகவில்லை என்பதால் பிறகு திரிஷாவிடம் சென்று பேசியிருக்கிறார். திரிஷாவும் குறைந்த சம்பளத்தில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார்.
இதனை அடுத்து இது நயன்தாராவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தை நீங்கள் தயாரிக்க வேண்டும் என்று வேல்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளார் நயன்தார. அதனை தொடர்ந்து வேக வேகமாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டீசர் வெளியிடப்பட்டது.
அதில் அந்த படத்தின் இயக்குனர் யார் என்பது கூட போடாமல் இருந்தது இந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தொடர்ந்து பேய் படங்களை இயக்கி வந்த சுந்தர் சி தற்சமயம் ஒரு சாமி படத்தை இயக்கலாம் என்று மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் களமிறங்கி இருக்கிறார். மேலும் அவர் காமெடி திரைப்படம் இயக்கும் இயக்குனர் என்பதால் இந்த படமும் நகைச்சுவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் ஆர் ஜே பாலாஜியின் மாசாணி அம்மன் படத்திற்கு எதிராக தான் வெளியாகிறது என்று கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்