Connect with us

அதுக்குன்னு இப்படி கட்டம் கட்ட கூடாது?. நயன் தாரா சம்பவத்தால் வருத்தத்தில் இருக்கும் ஆர்.ஜே பாலாஜி..!

News

அதுக்குன்னு இப்படி கட்டம் கட்ட கூடாது?. நயன் தாரா சம்பவத்தால் வருத்தத்தில் இருக்கும் ஆர்.ஜே பாலாஜி..!

Social Media Bar

ஆர்.ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவைதான்.

இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி நடித்த திரைப்படங்களில் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட திரைப்படமாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் இருந்தது.

மூக்குத்தி அம்மன் திரைப்படம்:

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா நடித்தார். இந்த திரைப்படத்தை ஆரம்பிக்கும் பொழுது இதில் நயன்தாராவை கதாநாயகியாக வைக்கவில்லை. முதலில் சுருதிஹாசன்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

அதற்கு பிறகு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், ஆர்.ஜே பாலாஜியிடம் பேசுவதன் மூலமாக பிறகு கதாநாயகிக்கு நயன் தாராவை மாற்றினர். ஆனால் அதுவே இப்பொழுது ஆர்.ஜே பாலாஜிக்கு பிரச்சனையாக வந்து முடிந்துள்ளது.

வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்தான் மூக்குத்தி அம்மன் திரைப்படம் தயாரானது. தற்சமயம் அதன் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் திரிஷாவைதான் அவர் அம்மனாக நடிக்க வைக்க இருக்கிறார்.

நயன்தாரா ப்ளான்:

அதற்கு முக்கிய காரணம் நயன்தாராவின் சம்பளத்தை விடவும் திரிஷாவின் சம்பளம் கம்மியாக இருப்பதுதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனால் கோபமடைந்த நயன்தாரா வேல்ஸ் நிறுவனத்திடம் பேசி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தனியாக எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

அதனை தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் தயாரிக்க இருக்கிறது இது குறித்த அனவுன்ஸ்மென்ட் தற்சமயம் வெளியானது. இது ஆர் ஜே பாலாஜிக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top