எம்.எஸ் தோனி இவானா காம்போவில் உருவாகும் திரைப்படம் – வெளியான மோஷன் போஸ்டர்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான எம்.எஸ் தோனி தற்சமயம் திரைத்துறை மீது ஆர்வம் காட்டி வருகிறார். கிட்டத்தட்ட தற்சமயம் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். எனவே அடுத்தக்கட்ட பணியாக சினிமா துறையில் இறங்கியுள்ளார்.

Social Media Bar

முதல் படத்தை தமிழில் தயாரிக்கலாம் என முடிவு செய்தார். எம்.எஸ் தோனிக்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். எனவே இதற்காக இவர் துவங்கிய நிறுவனம்தான் தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடேட்.

பல படங்களை தயாரிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இருந்த நிலையில் இறுதியாக ஹரிஸ் கல்யாண் மற்றும் இவானா நடிப்பில் ஒரு படம் தயாரானது. இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

எல்.ஜி.எம் லெட்ஸ் கெட் மேரிட் எனப்படும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்சமயம் வெளியானது. இவானாவிற்கு தற்சமயம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் இந்த படம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.