Connect with us

அமரனுக்கு முன்பே முகுந்த் வரதராஜனை படத்தில் வைத்த பிரித்திவிராஜ்.. நல்லா காட்டி இருக்காங்க போல?.

sk prithiviraj

Tamil Cinema News

அமரனுக்கு முன்பே முகுந்த் வரதராஜனை படத்தில் வைத்த பிரித்திவிராஜ்.. நல்லா காட்டி இருக்காங்க போல?.

Social Media Bar

கடந்த தீபாவளி அன்று வெளியான திரைப்படங்களில் மற்ற திரைப்படங்களை விடவும் அதிகமாக கொண்டாடப்படும் திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது.

அமரன் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு முக்கிய வரவேற்பு கிடைப்பதற்கான முக்கிய காரணமே முகுந்த் வரதராஜன்தான்.

முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஆவார். ராணுவத்தில் பெரிய பதவிகளில் எல்லாம் இருந்து வந்த முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம்தான் அமரன்.

மலையாள படத்தில் வரும் காட்சி:

amaran

amaran

அதனால்தான் அமரன் திரைப்படத்திற்கு இவ்வளவு வரவேற்புகள் இருந்து வருகின்றன. உண்மையில் கிளைமாக்ஸ் என்ன என்று தெரிந்து மக்கள் போய் பார்க்கும் ஒரு திரைப்படம் என்றால் அது அமரன் திரைப்படம்தான்.

இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கும் முன்பே முகுந்த் வரதராஜன் குறித்து வேறு திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. நடிகர் பிரித்திவிராஜ் நடித்த ஒரு மலையாள திரைப்படத்தில் புகுந்து வரதராஜன் குறித்து ஒரு காட்சிகள் முன்பே வந்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டு பிக்கெட் 43 என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் பிரித்திவிராஜ் ராணுவ வீரராக நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் முகுந்த் வரதராஜன் இறந்த செய்தி பிரித்திவிராஜ்க்கு வருவதாக காட்சிகள் இருக்கும்.

அதனை கேட்ட பிரித்திவிராஜ் ஐயோ அவருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறதே என்று கூறிவிட்டு அதற்காக கவலைப்படுவதாக அந்த காட்சிகள் அமைந்திருக்கும் எனவே முகுந்த் வரதராஜை முன்பே சினிமாவில் பதிவு செய்து இருக்கிறார் பிரித்திவிராஜ் என்று இது குறித்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

To Top