Tamil Trailer
தமிழ் நாட்டில் ஒரு ஜான்விக்..! தெறி கிளப்பும் ஹிட் 3 ட்ரைலர்.!
தமிழ் தெலுங்கு என இரண்டு சினிமாக்களிலும் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் நானி. நான் ஈ திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் நானிக்கு தனிப்பட்ட வரவேற்பு உண்டானது.
அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கியது தெலுங்கில் நானி நடிக்கும் நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்திருக்கின்றன. அதேபோல நடிகர் நானிக்கும் கொஞ்சமாக தமிழ் பேச தெரியும்.
எப்படியும் இன்னும் சில நாட்களில் அவர் தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற தெலுங்கு நடிகர்களுடன் ஒப்பிடும்பொழுது நானி கொஞ்சம் தனித்துவமான நடிப்பு திறன் கொண்டவர்.
கொஞ்சம் நன்றாகவே நடிக்கக் கூடியவர் என்றும் கூறலாம். அதே போல நானியின் திரைப்படங்களில் தெலுங்கு படங்களில் உள்ளது போல மிக பிரம்மாண்டமான சண்டை காட்சிகள் எல்லாம் இருக்காது.
அந்த வகையில் அவர் நடித்து வெளியான சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இப்பொழுது அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஹிட் 3 இந்த திரைப்படம் வருகிற மே 1 அன்று திரையரங்கிற்கு வர இருக்கிறது.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது சாதாரண படங்களை விடவும் இந்த திரைப்படத்தில் ரத்த காட்சிகள் அதிகமாக இருப்பது தெரிகிறது கண்டிப்பாக இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் தான் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் ஹாலிவுட்டில்தான் இந்த மாதிரி ரத்தம் தெறிக்க தெறிக்க திரைப்படங்கள் வரும் தென்னிந்தியாவில் பெரிதாக அந்த மாதிரி திரைப்படங்கள் எடுக்கப்பட்டது கிடையாது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஒரு ஹாலிவுட் அனுபவத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தை சைலேஷ் ஹொலானு என்பவர் இயக்கி இருக்கிறார்.
