படப்பிடிப்பில் நண்பனா இருந்தாலும் அப்படிதான் நடந்துக்குவேன்!.. விடாப்பிடியாய் கூறிய நாகேஷ்!.
Actor Nagesh : பழைய காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது நிறைய வரவேற்பு இருந்ததால் பெரும் நடிகர்கள் கூட தங்களது திரைப்படங்களில் நாகேஷ்தான் காமெடி நடிகராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
கதாநாயகனாக நடிக்கவும் ஆசை இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்படி அவர் கதாநாயகனாக நடித்த பிரபலமான திரைப்படம் என்றால் அது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான சர்வர் சுந்தரம் திரைப்படம் கே.பாலச்சந்தருக்கும் நாகேஸ்வருக்கும் இருந்த நட்பு மிக நாட்களாக இருந்த நட்பாகும்.

பாலச்சந்தர் சினிமாவிற்கு வருவதற்கு நாடகங்களை நடத்தி வந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே நாகேஷிற்க்கும் பாலச்சந்தருக்கும் இடையே பழக்கம் இருந்தது. அப்போது இருவரும் தங்களை போடா வாடா என்றுதான் அழைத்துக் கொள்வார்கள்.
பிறகு சினிமாவில் பாலச்சந்தர் இயக்குனராக அறிமுகமான பொழுது அவரை நாகேஷ் வணக்கம் சார் என்று கூறி அழைத்திருக்கிறார். இது பாலச்சந்தருக்கு பெருமகிழ்ச்சி கொடுத்திருக்கிறது. என்ன நாகேஷ் நம்மை சார் என்று மரியாதையாக அழைக்கிறார் என்று நினைத்த பாலச்சந்தர் நாகேஸை தனியாக அழைத்துச் சென்று எதற்காக என்னை சார் என்று அழைக்கிறீர்கள் என்று கோபித்துக் கொண்டார்.
அதற்கு பதில் அளித்த நாகேஷ் வெளியில் நாம் பெரும் நண்பர்களாக இருக்கலாம் ஆனால் திரைப்பட துறையைப் பொறுத்தவரை நீ ஒரு இயக்குனர் அதற்கான மரியாதையை நான் கொடுத்தாக வேண்டும். இல்லை என்றால் மற்றவர்களும் உன்னை மரியாதை குறைவாக பேசுவார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.