Connect with us

பாக்கி எங்கடா? –ஸ்பாட்டில் டயலாக் பேசி கமலை அதிர விட்ட நாகேஷ்!

Cinema History

பாக்கி எங்கடா? –ஸ்பாட்டில் டயலாக் பேசி கமலை அதிர விட்ட நாகேஷ்!

Social Media Bar

இப்போது உள்ள காமெடி நடிகர்கள் பல நகைச்சுவை செய்தாலும் கூட நமக்கு சிரிப்பு வருவதில்லை. ஆனால் திரைத்துறையில் முன்பு இருந்த காமெடி நடிகர்கள் மிகவும் எளிதாக நகைச்சுவை காட்சிகளை கையாள கூடியவர்கள். மிகவும் இயல்பாகவே அவர்கள் நகைச்சுவையை வெளிப்படுத்துவார்கள்.

கமல் அவருக்கென ஒரு நடிக பட்டாளத்தை வைத்துள்ளார். கமல் நடிக்கும் அதிக படங்களில் அவர்களை பார்க்கலாம். நாசர், பட்டாவி பாஸ்கர்,நாகேஷ், சந்தான பாரதி என பலரும் தொடர்ந்து கமல் படத்தில் நடிப்பவர்கள் ஆவர்.

நாகேஷ் கமலுடன் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பஞ்ச தந்திரம், தசாவதாரம், அவ்வை ஷண்முகி, அபூர்வ சகோதரர்கள் இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். அபூர்வ சகோதர்கள் திரைப்படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் ஒரு காட்சியில் கமலின் அம்மாவை கடத்தி வைத்துக்கொண்டு கமலை கண்டறிய ஆட்களை அனுப்புவார் நாகேஷ். அப்போது குள்ளமாக இருக்கும் கமலை ஆட்கள் அழைத்து வருவார்கள். அந்த காட்சிகளுக்கான வசனங்கள் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன.

ஆனால் ஸ்பாட்டில் குள்ள கமலை பார்த்ததும் நாகேஷ் கடத்தி வந்தவர்களிடம் பாக்கி எங்கடா? என கேட்பார். இந்த வசனத்தை படத்தின் வசனத்தில் எழுதவே இல்லை. ஒரு சிரிப்பு வரக்கூடிய நகைச்சுவையை வெகு இயல்பாக நாகேஷ் வெளிப்படுத்திவிடுவார் என இந்த சம்பவத்தை விவரிக்கிறார் கமல்.

To Top