Hollywood Cinema news
தெறிக்க விடும் ப்ளாஷ் ட்ரைலர்! – மகிழ்ச்சியில் டிசி ரசிகர்கள்!
தமிழ் சினிமா ரசிகர்களில் ஹாலிவுட் திரைப்படங்கள் மீது பெரும் ஆர்வம் கொண்ட ரசிக பட்டாளம் உண்டு. அதுவும் சூப்பர் ஹீரோ படங்களுக்கென்று ஒரு கூட்டமும் உள்ளது.
தமிழில் விஜய் அஜித் போட்டி போல ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்கள் வழியாக மார்வெல் டிசி என்ற இரு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன.
டிசி நிறுவனம் சூப்பர் மேன், பேட் மேன் போன்ற பிரபலமான கதாநாயகர்களை கொண்டிருந்தாலும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் ஒரு திட்டமிடலை அவர்களால் செய்ய முடியவில்லை. டிசியில் பேட்மேன் கதாபாத்திரம் மட்டும் இதுவரை பல முறை மாறிவிட்டனர். இந்த மாதிரி மாறும்போதெல்லாம் அது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் தற்சமயம் ப்ளாஷ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விரைவான வேகத்தில் செல்லும் ப்ளாஷால் டைம் ட்ராவல் செய்ய முடியும் என்கிற கான்செப்ட்டை கொண்டு கதை செல்கிறது. டைம் ட்ராவல் செய்து இறந்த காலத்திற்கு செல்லும் ப்ளாஷ் அங்கு என்ன செய்கிறான் என்பதாக கதை செல்கிறது.
இந்த படத்தின் ட்ரைலருக்கு அதிகம் நேர்மறையான வரவேற்புகள் வந்துள்ளன. படத்தின் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்