Cinema History
அந்த படத்துல விஜய் நடிச்சா சரியா இருக்காது!.. சண்டை போட்ட நாகேஷ்!..
சினிமா நடிகர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படங்கள் என்று சில திரைப்படங்கள் இருக்கும். அவை அவர்களுக்கு பெரும் முன்னேற்றத்தை பெற்றுக் கொடுத்திருக்கும் அப்படியான சில படங்கள் நடிகர் விஜய்க்கும் உண்டு அதில் முக்கியமான திரைப்படம் பூவே உனக்காக.
இந்தத் திரைப்படத்திற்கு முன்பு வரை அதிகமாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் திரைப்படத்தில்தான் விஜய் நடித்தார். அந்த திரைப்படங்களில் எல்லாம் ஒரு ப்ளேபாய் மாதிரியான கதாபாத்திரத்தில்தான் விஜய் நடித்து வந்தார். முக்கியமாக நடிகை சங்கவி அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் அந்த திரைப்படங்கள் குடும்ப ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இதனால் விஜய்க்கும் வரவேற்பு கிடைக்காமலே இருந்தது ஆனால் பூவே உனக்காக திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறப்பான திரைப்படமாகும். அதுதான் விஜய்யின் சினிமா வாழ்க்கையை பெரிதாக மாற்றி அமைத்த திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தின் கதையை எழுதிய பிறகு இதில் முக்கியமான சில பழைய நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று விக்ரமன் நினைத்தார். எனவே நடிகர் நாகேஷிடமும் நம்பியாரிடமும் இது குறித்து பேசினார். அப்பொழுது படத்தின் கதையை கேட்ட நாகேஷ் இந்த கதைப்படி படத்தின் மொத்த கதையும் அந்த கதாநாயகன் கதாபாத்திரத்தின் மேல்தான் இருக்கிறது.
இப்படியான ஒரு வலுவான கதாபாத்திரத்தை விஜய்யால் தாங்க முடியாது அதனால் அவன் இந்த திரைப்படத்திற்கு சரியாக இருக்கமாட்டான் என்று நாகேஷ் கூறினார் .இருந்தாலும் விக்ரமனிற்க்கு விஜய் மீது அதிக நம்பிக்கை இருந்தது.
பிறகு படப்பிடிப்பு நடக்க துவங்கியவுடன் நாகேஷ் விஜய்யின் நடிப்பை பார்த்த பிறகு விஜய்யால் இந்த படத்தில் நடிக்க முடியும் என்று தெரிந்து கொண்டார்.
