சிவாஜி கணேசன் வர்ற கேப்பில் அதை நடிச்சிக்குறேன்!.. கொஞ்ச நேரத்தில் நாகேஷ் நடித்து மாஸ் ஹிட் கொடுத்த காட்சி!..
Actor Nagesh : சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டத்திலேயே நடிப்பில் பலவிதமான திறமைகளை வெளிப்படுத்தியவர் நடிகர் நாகேஷ். அப்போது தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான நகைச்சுவை கலைஞர்கள் இருந்த போது கூட நாகேஷ் தனித்துவமாக தெரிய காரணமாக இருந்தது அவருடைய உடல் மொழி.
அவர் எந்தவித நகைச்சுவையும் பேசாமல் உடல் மொழியில் காட்டி அவரால் மக்களை சிரிக்க வைக்க முடியும். அந்த ஒரு விஷயம் அவருக்கு அதிக வரவேற்பை உண்டாக்கியது. இதனால் பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் கூட தொடர்ந்து நடிகர் நாகேஷுக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தன அதேபோல நகைச்சுவை காட்சிகளில் தனக்கு பிடித்தமான சில விஷயங்களை நாகேஷ் இயக்குனரிடம் கேட்காமல் சேர்த்து விடுவார்.

அப்படி சேர்க்கும் காட்சிகள் அதிகபட்சம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விடும். இதனால் இயக்குனர்களும் காமெடி காட்சிகளைப் பொறுத்தவரை அதை நாகேஷின் விருப்பத்திற்கே விட்டு விடுவது உண்டு. இப்படியான ஒரு சம்பவம் திருவிளையாடல் திரைப்படத்திலும் நடந்துள்ளது.
திருவிளையாடல் திரைப்படத்தில் நாகேஷ் நடித்த தருமி என்கிற கதாபாத்திரம் இப்போது வரை மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் ஒரு கதாபாத்திரமாகும். அந்த மொத்த திரைப்படத்திலும் மிகவும் கலகலப்பாக செல்லக்கூடிய ஒரு காட்சி என்றால் அது தருமி வருகிற காட்சிகள் தான்.

இந்த நிலையில் அந்த காட்சியில் சிவாஜி கணேசன் புலவனாக தருமியை சந்திக்க வரும் காட்சி ஒன்று இருக்கும். அப்போது கோவிலில் நாகேஷ் புலம்பிக்கொண்டிருக்கும் காட்சி இருக்கும். அது முதலில் படத்தில் வைக்கப்படுவதாகவே இல்லை.
சிவாஜி கணேசன் மேக்கப் போட்டுக் கொண்டு வருவதற்கு தாமதமானதால் அதற்கு முன்பு சும்மா புலம்புவது போல ஒரு காட்சியை நடிப்பதாக நாகேஷ் இயக்குனரிடம் கேட்டுக்கொண்டார். இயக்குனரும் சரி நாகேஷ் ஏதோ ஒன்று செய்யட்டும் என்று அதை படம்பிடிக்கவும் சொல்லிவிட்டார். அதன் பிறகு நடிக்க துவங்கிய நாகேஷ் அந்த பரிசு எனக்கு இல்ல என்ற துவங்கி சில நேரங்கள் பரிதவிப்புடன் பேசுவார்.
அதை மிகவும் சிறப்பாக அமைந்துவிட அதை இயக்குனரும் படம் பிடித்து வைத்துக் கொண்டார் பிறகு படத்தில் வெளியான பொழுது அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது