Movie Reviews
சூர்யா சாட்டர்டே படம் எப்படி இருக்கு?.. திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்!.
தெலுங்கில் பிரபல நடிகரான நானி நடித்து சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக சூர்யா சாட்டர்டே திரைப்படம் இருந்து வருகிறது.
சூர்யா சாட்டர்டே திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தின் கதைதான். திரைப்படத்தின் கதையை பொறுத்தவரை சிறு வயது முதலே அதிக கோபப்படும் ஒரு கதாபாத்திரமாக நானியின் கதாபாத்திரம் இருக்கிறது.
இந்த நிலையில் அவரது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக அவரது அம்மா ஒரு சத்தியம் வாங்குகிறார். அதாவது வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் நானி கோபப்பட வேண்டும்.
படத்தின் கதை:
மற்ற ஆறு நாட்களும் கோபம் வந்தாலும் அமைதியாகதான் இருக்க வேண்டும். இந்த சத்தியத்தை வாங்கிய பிறகு நானியின் தாயார் இறந்து விடுகிறார்.
பிறகு அதையே வாழ்நாள் முழுமையும் பின்பற்றுகிறார் நானி. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் 6 நாட்கள் நடக்கும் நிகழ்வுகளில் யார் மீது எல்லாம் கோபம் வருகிறதோ அவர்கள் பெயரை எல்லாம் டைரியில் குறித்து வைத்துக் கொள்வார்.
சனிக்கிழமை அந்த ஆறு நபர்களில் யார் மீது இன்னமும் கோபம் குறையாமல் இருக்கிறதோ அவர்களை மட்டும் சென்று அடித்து விட்டு வருவார்.
கதாநாயகனுக்கு வரும் பிரச்சனை
இப்படியாக நானி செய்து கொண்டிருக்கும் பொழுது அதே ஊரில் போலீசாக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவிற்கும் நானிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த நிலையில் ஒரு சனிக்கிழமையில் எஸ் ஜே சூர்யாவை அடிப்பதற்கு திட்டம் தீட்டுகிறார் நானி. அதனை தொடர்ந்து என்னவெல்லாம் பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதுதான் கதை.
படத்தின் கதை அம்சத்தை பொருத்தவரை நல்ல திரை கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும். படத்தில் ஒவ்வொரு காட்சியும் மற்ற காட்சிகளோடு கனெக்டிவிட்டியாக இருக்கிறது மாஸ் காட்சிகள் பலவும் படத்தில் வொர்க் அவுட் ஆகி இருக்கின்றன. இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடியில் வெளியான பிறகு இந்த திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்