Anime
ஹிடன் லீஃப் வில்லேஜ் உருவான கதை!.. நருட்டோ ஷிப்புடன்!.
வெறுப்பு மற்றும் போருக்கு எதிராக ஜப்பானில் எடுக்கப்பட்டு தற்சமயம் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் அனிமேதான் நருட்டோ ஷிப்புடன். ஹிடன் லீஃப் வில்லேஜ் எனும் கிராமம்தான் ஒட்டு மொத்த நருட்டோவின் கதைகளமாக இருக்கிறது.
அந்த கிராமம் எப்படி உருவானது என்கிற கதையை இப்போது பார்க்கலாம். கிராமம் என்கிற முறையே இல்லாமல் இருந்த காலக்கட்டத்தில் மக்கள் தங்கி நாகரிகம் உருவாவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. மக்களுக்கு என நிரந்தரமான பள்ளிகள், மருத்துவமனைகள் இருக்கவில்லை.

இந்த நிலையில் அப்படி ஒரு கிராமம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஒரு சிறுவன் கனவு காண்கிறான். அவன் தான் ஹசிராமா செஞ்சு. அவன் தினசரி ஆற்றங்கரைக்கு செல்லும்போது அங்கு மற்றொரு சிறுவனை பார்க்கிறான். அவன் பெயர் மதரா உச்சிஹா.
பரம்பரை பிரச்சனை:
உச்சிஹா பரம்பரைக்கும் செஞ்சு பரம்பரைக்கும் இடையே வெகு காலங்களாக போர் நடந்து வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் தாங்கள் என்ன வம்சாவளி என்பதையே வெளிப்படுத்தாமல் பழகி வருகின்றனர். 5 சகோதர்களுடன் சேர்ந்து பிறக்கு மதரா அவர்களை காப்பாற்றுவதை தனது வாழ்நாள் குறிக்கோளாக கொண்டுள்ளான்.
ஒரு சமயத்தில் இருவருக்குமே அவர்கள் எதிரெதிர் பரம்பரையை சேர்ந்தவர்கள் என தெரிந்த பிறகு பிரிந்துவிடுகின்றனர். இதற்கு நடுவே செஞ்சு பரம்பரையால் மதராவின் அனைத்து தம்பிகளும் கொலை செய்யப்படுகின்றனர்.
மதராவின் கனவு
ஒரு தம்பி மட்டும் மிஞ்சியிருக்க அவனை மட்டுமாவது காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் அந்த தம்பியையும் ஹசிராமாவின் தம்பியான டோமிராமா கொன்று விடுகிறான். இதனால் செஞ்சு க்ளானுக்கு எதிராக போர் செய்கிறான் மதரா.

அந்த போரில் தனது நண்பன் ஹசிராமாவின் நல்ல மனதை புரிந்துக்கொண்டு அவன் கனவுகளுக்காக அவனுடன் கை கோர்க்கிறான் மதரா உச்சிஹா. ஹிடன் லீஃப் வில்லேஜும் உருவாகிறது. ஹிடன் லீஃப் வில்லேஜ் உருவான பிறகு அதை பார்த்து மற்ற இடங்களிலும் ஃபையர், மிஸ்ட் என வில்லேஜ்கள் உருவாக துவங்குகின்றன.
ஹிடன் லீஃப் வில்லேஜ் உருவாதல்:
ஹிடன் லீஃப் வில்லேஜிற்கு தலைவராக இருப்பவருக்கு ஹொக்காகே என பெயரிடப்படுகிறது. அதே போல மற்ற தேசங்களின் தலைவர்களுக்கும் ரைக்காகே, காசுக்காகே, மிசுக்காகே என பெயரிடப்படுகிறது. இப்படி ஒரு சமூக அமைப்பை ஹசிராமா உருவாக்கிய பிறகு ஹிடன் லீஃப்பில் நடக்கும் முதல் ஹோக்காகே ஓட்டெடுப்பில் ஹசிராமா ஹொக்காகேவாக தேர்ந்தெடுக்கப்படுகின்றான்.

ஆனால் மதராதான் முதல் ஹொக்காகேவாக ஆசைப்பட்டிருப்பான். எனவே இதனால் கடுப்பான மதரா மீண்டும் தீய வழியை நோக்கி செல்ல அவன் செய்யும் விஷயங்களே பிறகு நருட்டோ சீரிஸ் முழுக்க எதிரொளிக்கிறது.
